என்னை வெறுத்தாலும் எனக்கு கவலை இல்லை – செருப்பை காட்டி ரேஷ்மா வெளியிட்ட வீடியோ.

0
1426
Reshma
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் ‘ புஸ்பா புருஷன்’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடையை அதிகமாகப் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. ரேஷ்மா சென்னையில் பிறந்தவர். இவருடைய அப்பா தெலுங்கு தயாரிப்பாளர் ஆவார். இவர் முதலில் விமானத்தில் பணிப் பெண்ணாக வேலை செய்து கொண்டு இருந்தார். பின்னர்,படிப்படியாக முன்னேறி சின்னத்திரை,வெள்ளித்திரை என அனைத்திலும் கலக்கி கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

ரேஷ்மா அவர்கள் செய்திவாசிப்பாளர், நடிகை, மாடலிங், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். இவர் முதன்முதலில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலம் ஆனார்.அதோடு முதலில் ரேஷ்மா அவர்கள் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார். இதனை அடுத்து இவர் சினிமா துறையில் ஒரு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

- Advertisement -

இதற்கு பின்னர் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரேஷ்மா ஒரு சில படங்களில் கமிட்டாகி உள்ளார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து தற்போது அவர் டிவி சேனலில் காமெடியில் ‘என்னம்மா இப்படி பண்றிங்களேமா’ டயலாக் இன் மூலம் பிரபலமான ராமருடன் இணைந்து படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடுவது வழக்கம். அதிலும் கடந்த சில காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் ரேஷ்மா. அந்த வகையில் சமீபத்தில் இவர் கையில் செருப்பை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு கீழே, என்னை யார் வெறுத்தாலும் கவலை இல்லை #lovemeorhatemeidontcare என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement