புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறீர்கள். எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் – லோகேஷ் கனகராஜிக்கு ட்வீட் செய்த பிக் பாஸ் 3 நடிகை.

0
531
lokesh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ரேஷ்மா.இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கி இருந்தார். பிறகு தான் நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக மீடியாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆரம்பத்தில் இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வாணி ராணி’ தொடர் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் வம்சம், மரகத வீனை, பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் செய்தி வாசிப்பாளராகவும் பணி புரிந்து இருக்கிறார். அதேபோல் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மசாலா படம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

- Advertisement -

நடித்த படங்கள் :

அதைத் தொடர்ந்து இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற வந்துட்டா நடித்து முதல் படத்திலேயே ‘புஷ்பா புருஷன்’ காமெடி மூலம் மக்களிடையே நல்ல பெயரை பெற்று இருந்தார் ரேஷ்மா. இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

டிவிட்டர் பதிவு :

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. தற்போது இவர் விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இப்படி பட்ட நிலையில் தான் நேற்றுஅவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டைக் கொண்டு வந்தார், தற்போது தளபதி விஜய்யின் அடுத்த படத்தை தயாரிப்பதில் பிஸியாக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் வாய்ப்பு கோரினார்.

-விளம்பரம்-

12 வருடமாக இருக்கிறேன் சினிமாவில் இருக்கிறேன் :

சேலை அணிந்தபடி தொடர் படங்களை பதிவேற்றிய ரேஷ்மா, லோகேஷ் படத்தில் நடிக்க விரும்புவதாக கூறினார்.அவர் போட்டு இன்ஸ்டா பதிவில் “லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க வேண்டும், எப்படி அவரை தொடர்புகொள்வது என்பது தெரியவில்லை. யாராவது உதவி செய்யுங்கள். 12 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். யாராவதுவாய்ப்பு கொடுக்க வேண்டும் அல்லவா, புதிதாக வருபவர்கள் எங்களை விட அதிக வாய்ப்புகளை பெறுகிறார்கள்.

அதில் தவறொன்றும் இல்லை ஆனால், இதுபோன்ற நியாயமற்ற நிலை மாற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிய நிலையில் புது முகங்கள் என்று யாரை கூறுகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஜனனியை மறைமுகமாக கூறினாரா? :

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 பைனலில் பேசிய ஜனனி அவர்களிடம் கமல்ஹாசன் ஜனனியிடம் நீங்கள் இன்னும் இலங்கைக்கு செல்லவில்லையா என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஜனனி இல்லை சார் நான் என்னுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாத அளவிற்கு வாய்ப்புகள் வந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் ஜனனியிடம் நாசுக்காக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு சற்றும் எதிர்பார்க்காமல் உடனே பதில் அளித்துள்ளார் ஜனனி அதாவது ஆமாம் சார் என்று ஓபனாக கூறிவிட்டார் என்று கூறப்படுகிறது இதனை வைத்து பார்க்கும் போது ஒருவேளை பிக் பாஸ் சீசன் 6 பிரபலம் ஜனனியை நடிகை ரேஷிமா குறிப்பிடுகிறாரா? என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement