பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரேஷ்மா வெளியிட்ட முதல் வீடியோ.! ரசிகர்களின் கமன்ட்.!

0
3464
Reshma
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை கடந்துள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

-விளம்பரம்-

கடந்த வார நாமினேஷன் லிஸ்டில் சாக்க்ஷி, கவின், அபிராமி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்னர். இந்த வாரம் சாக்க்ஷி தான் வெளியேறுவார் என்று பலரும் எண்ணி வரும் நிலையில் தற்போது வியப்பூட்டும் திருப்பங்கள் நடந்தது. இந்த வாரம் சாக்க்ஷி தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், ரேஷ்மா வெளியேற்றபட்டார்.

- Advertisement -

ரேஷ்மா இந்த வாரம் 1 கோடியே 30 லட்சம் வாக்குகள் விழுந்ததாகவும், வெறும் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் ரேஷ்மா வெளியேறியதாகவும் கமல் கூறியிருந்தார். இருப்பினும் ரசிகர்களால் இதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்க்கு முக்கிய காரணமே சாக்க்ஷி தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், எதிர்பாராத விதமாக ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ரேஷ்மா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார் ரேஷ்மா, இந்த பதிவை கண்ட பலரும் ரேஷ்மாவிற்கு ஆதரவு தெரிவித்து கமன்ட் செய்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement