முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரியோவின் மகள் – ஆரி உட்பட ஆஜரான பிக் பாஸ் பிரபலங்கள்.

0
992
rio
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-
 தெலுங்கு பிக் பாஸ் பிரபலம் சொஹெலும் இதில் கலந்துக் கொண்டார்.

மற்ற சீசன்களைவிட இந்த சீசனில் தான் எக்கசக்க விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதிலும் ஷிவானி, ஆஜீத் ஆகியோரை எல்லாம் பொத்தி பொத்தி காப்பற்றியது பிக் பாஸ். இதில் ரியோவை பற்றி சொல்லவா வேண்டும். அதிலும் கடந்த வாரம் பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் ரியோ கடைசி வார நாமினேஷனில் இருந்த போது அவரை இறுதி போட்டிக்கு அனுப்ப பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.

- Advertisement -

பலரும் ரியோவிற்கு 50 வாக்குகளை அளித்த ஸ்க்ரீன் ஷாட்டை கூட தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். ஆனாலும் ரியோவால் டாப் இரண்டு இடத்தை பிடிக்க முடியவில்லை. நடிகர் ரியோ, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி ஆம் தேதி, ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரியோ வீஜேவாக அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே ஸ்ருதியைத் தெரியும். ரெண்டு பேரும் நண்பர்கள். ஒருநாள் அண்ணா யுனிவர்சிட்டியின் நிகழ்ச்சிக்காக ரியோவும் ஸ்ருதியும்சென்ற போது அங்கேதான் திடீர்னு ஸ்ருதி தன் காதலைச்சொல்லி இருக்கிறார்.

 நிகழ்ச்சி முடிந்த பின்னர், போட்டியாளர்கள் அனைவரும் தனிப்பட்ட விழாக்களில் ஒன்றாக கலந்துக் கொண்டு வருகிறார்கள்.

ரியோவிற்கும் ஸ்ருதியை ரொம்பப் பிடிக்கும். ஆனாலும், கெத்தை மெயின்டெய்ன் பண்ணனுமே. ரெண்டு நாள் கழிச்சுதான் ஓ.கே சொன்னேன்’ என்று பேட்டி ஒன்றில் பேசி இருந்தார் ரியோ. இப்படி ஒரு நிலையில் இவர்களுக்கு ரித்தி என்ற மகளும் பிறந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று ரித்தி தனது முதல் பிறந்தநாளை கொண்டாடினார். இந்த கொண்டாடடத்தில் ஆரி உட்பட பல்வேறு பிக் பாஸ் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

Advertisement