ரியோவை ஹீரோவா என்று கேட்ட பாலாஜி – வீடியோ பதிவிட்டு பதிலடி கொடுத்த ரியோ மனைவி.

0
3250
rio
- Advertisement -

ரியோவை ஹீரோவா என்று கேட்டதற்கு ரியோவின் மனைவி சுருதி பதிலடி கொடுத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நிகழ்ச்சியில் கால் சென்டர் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் கால் சென்டரில் இருக்கும் நபர்களுக்கு வீட்டில் உள்ள யார் வேண்டுமானலும் போன் செய்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதில் முதல் அழைப்பாக பாலாஜிக்கு அர்ச்சனா கால் செய்து இருந்தார். மேலும், அர்ச்சனா கேட்ட கேள்விக்கு பாலாஜி பொறுமையாக பதில் கூறியதால் அர்ச்சனா அடுத்த வாரம் நாமினேட் ஆனார்.

-விளம்பரம்-

இந்த டாஸ்கின் போது அர்ச்சனா பாலாஜியிடம் நான் எப்போதும் மூன்றுபேரை முன்னிறுத்தி விளையாடுகிறேன் என்று சொல்கிறீர்களே அந்த மூன்று பேர் யார் என்று சொல்ல முடியுமா என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பாலாஜி சோம் சேகர் கேப்ரில்லா மற்றும் பெயரை குறிப்பிட்டு இருந்தார். இந்த டாஸ்க் முடிந்து பாலாஜி வெளியில் வந்தவுடன் பாலாஜியிடம் எனக்காக அர்ச்சனா என்ன விளையாடுகிறார் என்று சொல்லுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஆனால் அதற்கு பாலாஜியிடம் எந்த ஒரு பதிலும் வரவில்லை.

- Advertisement -

தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த பாலாஜி இப்போது என்ன எல்லாரும் கிங்காக வந்து என்னை டார்கெட் செய்கிறீர்களா என்று சொன்னார் இதனால் கடுப்பான ரியோ இங்கே எந்த பங்கும் கிடையாது உன்னை ஒரு ஆள் ஆகவே நான் மதிக்கவில்லை அதனால்தான் உன்னிடம் நான் எதைப்பற்றி கேட்கவில்லை என்று சத்தம் போட்டு பேசினார். இதற்கு பாலாஜி ‘என்ன ஹீரோவா என்று கேட்டார்’ அதற்கு ஆமாண்டா ஹீரோ தாண்டா என்று சொன்னார். அதற்கு பாலாஜியும் நானும் ஹீரோதான் என்று கூறியிருந்தார். அதற்கு ரியோ ‘இருந்துட்டு போ’ என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சித்து வரும் தயாரிப்பாளர் ரவீந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த சம்பவம் குறித்து பேசி இருந்தா.ர் அதில் ரியோ உண்மையில் ஹீரோ தான் அவர் ஏற்கனவே நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தில் பெருவாரியான மக்களிடம் ஒரு கலெக்ஷனை ஏற்படுத்தி நல்ல பிசினஸ் செய்யும் ஏற்படுத்தி இருந்தார் என்று கூறி இருந்தார் ரவீந்திரன். இந்த வீடியோவை பிரிவின் மனைவியான ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement