விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல இந்த சீசனில் எக்கச்சக்க விஜய் டிவி பிரபலங்களும் போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் ரியோவும் ஒருவர். விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ரியோ. கனா காணும் காலங்கள் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடவே ரியோ ராஜ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒருமுகமாக மாறிவிட்டார்.
அதன் பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார் ரியோ. ரியோ, சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலான சரவணன் மீனாட்சியின் மூன்றாவது சீஸனில் நடித்திருந்தார். எதிர்பார்த்தது போல அந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது இதை தொடர்ந்து சினிமாவில் இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தில் ஹீரோவாக களம் இறங்கினார் நடிகர் ரியோ.
அந்த திரைப்படம் ஓரளவிற்கு வெற்றியை அடைந்திருந்தது.நடிகர் ரியோ, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி ஆம் தேதி, ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரியோ வீஜேவாக அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே ஸ்ருதியைத் தெரியும். ரெண்டு பேரும் நண்பர்கள். ரியோ பிக் பாஸில் கலந்து கொண்ட பின்னர் ஆரம்பத்தில் ரியோவிற்கு நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், சமீபகாலமாக இவரது பெயர் டேமேஜ் ஆகி வருகிறது. சமீபத்தில் கூட ரியோ மனைவி சுருதி ரியோ குறித்து பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
வீடியோவில் 4 நிமிடத்தில் பார்க்கவும்
அதில், ஒருவேளை நான் உன்னை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி இருக்க கூடாது இது நமக்கானது அல்ல என்று தெரியவில்லை என்ன நடந்தாலும் உனக்காக நான் இருக்கிறேன் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடத்திலும் உனக்காக இருப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரியோவின் நெருங்கிய நண்பர் பிரிட்டோ அளித்த பேட்டியில், , என்னை பொறுத்த வரை ரியோ நன்றாக தான் விளையாடுகிறார். அவர் கோபப்படும் இடத்தில் அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் கொஞ்சம் வருத்தப்படுகிறோம்.
அவனுக்கு நிறைய கோபம் வரும் அது அவனுடன் பழகிய நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கு நன்றாக தெரியும்நாங்கள் அனைவரும் அவரது மனைவி ஸ்ருதியை மன வருத்தத்தில் இருந்து வெளியேற உதவி வருகிறோம். ரியோவை பற்றி தெரியாத சிலர் ஸ்ருதிக்கு மோசமான மெசேஜ் மற்றும் சில தொந்தரவுகளை இரவில் கொடுத்து வருகிறார்கள். அதனாலேயே அவர் ரியோவை பிக்பாஸிற்கு அனுப்பியிருக்க கூடாது என வருந்தியுள்ளார் என்று