ஆரியால் தான் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறத் திட்டமிட்டிருந்தார் – ரியோ குறித்து விஜய் டிவி பிரபலம் போட்ட பதிவு.

0
75605
rio

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

இப்படி ஒரு நிலையில் நேற்று (ஜனவரி 14) கேப்ரில்லா 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். ஆனால், கேப்ரில்லா பேட்டியை எடுத்தவுடன் ரியோ வந்து நான் எடுப்பதாக இருந்தேன் நீ ஏன் எடுத்த என்று கூறினார். அதே போல நீ ஏன் போக வேண்டும் என்று கேபி கேட்டதற்கு, எனக்கு என் பொண்ண பாக்கணும், என்னிடம் ஹாப்பி பொங்கல் சொல்லிவிட்டு அந்த பெட்டியை என்னிடம் கொடுத்துவிடு என்ற. அதற்கு கேபியோ, நீ போகணும்னா நீ எடுத்திருப்ப இல்ல என்று கேபி கேட்க, நான் ரெடியா தான் இருந்தேன் என்று ரியோ கூறினார்.

- Advertisement -

ஆனால், இறுதி வரை கேபி தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளாமல் தான் இருந்தார். இருப்பினும் இறுதி வரை ரியோ, எனக்கு வீட்டுக்கு போகணும் என்று கூறிக்கொண்டே இருந்தார்.நீ போனா உங்க அம்மாவ மட்டும் தான் பாக்கணும் ஆனால், நான் நிறைய பேர பாக்கணும் என்று ரியோ கூற, அதற்கு கேபி எனக்கு அம்மா மட்டும் தானடா இருக்காங்க என்று உருக்கத்தோடு கண் கலங்கினார்.கேப்ரில்லாவின் இந்த முடிவை பலரும் பாராட்டி வரும் நிலையில் ரியோ, கேபி எடுத்த பின்னர் தான் செல்ல வேண்டும் என்று சொன்னது நாடகம் போல இருக்கிறது என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள முன்னாள் விஜய் டிவி பிரபலமும் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன், ரியோவின் பேச்சும், சிரிப்பும், ஆட்டமும், பாட்டமும் எவ்வளவு நிஜமற்றது என்று கடந்த 2 நாட்களாக நிரூபணமானது.மூன்று நாட்களுக்கு முன், சற்று ஒதுங்கி அமைதியாயிருந்த ஆரியிடம் வலியச் சென்று “இன்னும் மூன்று நாள்தான் ப்ரோ, சகஜமா ஜாலியா இருங்க, எல்லாரோடயும் சேருங்க ப்ரோ” என்று தோரணையுடன் அட்வைஸ் பண்ணிவிட்டு அத்தோடு பதுங்கியவர்தான், இன்னும் அவரைக் காணாமல் எல்லாரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கேபியை ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் அணைத்து, அரவணைத்து தன் பாசத்தையும், நேசத்தையும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தவர், அவர் 5 லட்ச பெட்டியை எடுத்துவிட்டார் என்றவுடன் அதைத் தனக்குத் தந்துவிடும்படி கெஞ்சிக் கூத்தாடி, emotional blackmail செய்து, போராடியும் பார்த்துத் தோற்று அடங்கிப்போனார்.அந்த அன்பும், உறவும் எங்கே போனது?ஞாயிறு நிகழ்ச்சியில் ஆரியின் வெற்றியை மேடையில் வேடிக்கைப் பார்த்து கைதட்டப் போகிற நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவர் நினைத்து நினைத்து நொந்துபோவதைப் பார்க்கமுடிகிறது. அதனால் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறத் திட்டமிட்டிருந்தார். அதுவும் மணல்கோட்டையானது!அதனால்தான் நிஷாவிடம் சொன்னார், “evict ஆகிப் போயிருந்தால் கூட சிரித்துக்கொண்டே போயிருப்பேன்” என்று.

Advertisement