கடந்த வாரம் ‘புதிய மனிதா’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் என இரண்டு அணிகளாக பிரிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ரோபோக்கள் தலைவராக அர்ச்சனா இருக்க, மனிதர்களின் தலைவராக பாலாஜி இருப்பார் என்றும் மனிதர்கள் டீம், இயந்திரங்களாக மாறியவர்களிடம் இருந்து மகிழ்ச்சி, கோபம், துக்கம் போன்ற எதாவது இரண்டு உணர்வுகளை கொண்டு வர எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவித்து இருந்தார்.
அர்ச்சனா, கேப்ரில்லா, பாலாஜி, சோம் சேகர், ரம்யா பாண்டியன், ஜித்தன் ஆகிய 6 பேர் ரோபோவாக இருந்தனர். அதே போல ரியோ, ஆரி, அனிதா, பாலாஜி, நிஷா, ஆஜீத் ஆகியோர் மனிதர்களாக இருந்தனர். இந்த டாஸ்க்கில் அர்ச்சனா குழு முதலில் ரோபோவாக விளையாடி இருந்தனர் இந்த டாஸ்க் ஆரம்பிக்கும் முன்னர், ஆரி, நிஷா, அனிதா ஆகிய மூன்று பேரும் அமர்ந்து ரோபோக்களாக இருந்த அனைவருக்கும் பட்டப் பெயரை வைத்தார்கள்.
ஆனால்,இந்த டாஸ்க் முடிந்த பின்னர் போரிங் போட்டியாளராக அனிதாவை ரியோ தேர்ந்தெடுத்த போது, அனைவருக்கும் பட்டப் பெயர் வைத்து கூப்பிட வேண்டாம் என்று சொன்னேன் ஆனால், அனிதா அதை கேட்காமல் சொல்லியதால் டாஸ்க் சுவாரசியம் குறைந்தது என்று கூறி இருந்தார். ஆனால், நிஷாவும் பட்டப் பெயர் வைத்து அழைத்தாரே என்று அனிதா கேட்டாதர்க்கு, அது எனக்கு பிடிக்கவில்லை ஆனால், நீ செய்தது போரிங் என்று திரும்ப திரும்ப கூறி இருந்தார்.
ஆனால், கடந்த சனிக்கிழமையன்று கமல் முன்பு பேசும் போது, தான் வாரம் முழுதும் ஒழுங்காக விளையாடினேன். நான் தனியாளாக கிச்சனில் நின்று சமைத்தேன் என்று சொன்னதற்கு இது எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் நான் உன் பெயரை சொல்லி இருக்க மாட்டேன் என்று கூறி இருந்தார். அதன் பின்னர் பேசிய ஆரி, ஒரு போட்டியாளராக நீங்கள் அனைத்தையும் பார்க்க வேண்டும். எல்லா விஷயத்திற்கும் ஒரு தன்னை முன்னிறுத்தி பேச மாட்டார் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தனது கணவருக்கு ஆதரவாக இந்த விஷயம் குறித்து பதிவிட்டுள்ள சுருதி, ரியோ ஆரியால ஒரு வாரம் முழுக்க நடந்த விஷயத்த ஞாபகம் வச்சி கரக்டா சொல்ல முடியல பெஸ்ட் யாரு? ஒர்ஸ்ட் யார்னு ? கமல்
சுருதி இப்படி சொன்னதற்கு முக்கிய காரணம், கடந்த வெள்ளிக்கிழமை ஆரி, ஒர்ஸ்ட் போட்டியாளராக சோம் சேகர் மற்றும் கேப்ரில்லா பெயரை குறிப்பிட்டு இருந்தார். ஆனால், சனிக்கிழமை கமல் கேட்ட போது நிஷாவின் பெயரை குறிப்பிட்டு இருந்தார் ஆரி, இதை குறிப்பிட்டு கேட்டுள்ள ஸ்ருதி, அப்போது ஆரி மட்டும் வாரம் முழுதும் பார்த்து பெஸ்ட் யாரு? ஒர்ஸ்ட் யார்னு ? சரியா முடிவு செஞ்சாரா என்பது போல கேள்வி எழுப்பி உள்ளார்.