எதுக்கு என்கவுன்டர் ? இப்படி பண்ணி இருக்கலாமே. அனைவரும் கொண்டாடிய விசயத்துக்கு ரித்விகா போட்ட பதிவு.

0
15528
Ritvika
- Advertisement -

நாட்டில் பெண்களை கற்பழித்து கொலை செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த கொடுமைகளை வழக்கமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் கேவலமான புத்தி உடைய மிருகங்கள். அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளம் பெண் பிரியங்கா என்பவரை கொடூரமாக கற்பழித்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த கோர சம்பவத்தை நடத்திய வழக்கில் லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் என நான்கு பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளார்கள். இது குறித்து விசாரிக்கையில், பிரியங்கா தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இவர் கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் பிரியங்கா வேலையை முடித்துவிட்டு தன் வண்டியில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போது சுங்கவாடி அருகே அவருடைய வாகனம் பஞ்சர் செய்து உள்ளார்கள். பின் பிரியங்காவை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்திச் சென்று அவளை வன்மையான முறையில் பாலியல் தொல்லைகளை செய்து கழுத்தை நெரித்து கொன்று விட்டார்கள் அந்த கேவலமான ஜென்மங்கள். அதுமட்டும் இல்லாமல் பிரியங்காவை ஒரு பாலத்திற்கு அடியில் போட்டு அவள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளார்கள். பிரியங்காவின் சடலத்தை எரித்து விட்டுட்டு அந்த நால்வரும் தப்பிச் சென்றார்கள். சுங்கச்சாவடி மற்றும் பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சியின் அடிப்படையில் இவர்கள் நால்வரும் தான் குற்றவாளிகள் என்று போலீசார் உறுதி செய்தார்கள். ஹைதராபாத்தில் பெண் மருத்துவருக்கு நடந்த இந்த கோர சம்பவம் இந்திய நாட்டை பயங்கர பரபரப்பில் ஆழ்த்தியது.

இதையும் பாருங்க : திருமண நாள் முடிந்து ஒரு மாசதுக்குள்ள இப்படி ஒரு விசேஷமா. அட்லீ மனைவிக்கு குவியும் வாழ்த்துக்கள்.

- Advertisement -

பின் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதோடு யாரும் இனிமேல் செய்ய முடியாத அளவுக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் போராட்டம் நடத்தி வந்தார்கள். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஜோலு நவீன், கேசவலு, முகம்மது பாஷா , சிவா ஆகிய நால்வரையும் போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் 4 பேரும் தப்பித்துச் செல்ல முயன்ற போது போலீசார் 4 பேரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார் என்று கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த மக்களும் கடும் கோபத்திலும் இருந்தார்கள். மேலும், இந்த சம்பவத்தின் மூலம் அந்த பெண்ணின் ஆத்மா சாந்தி அடையும் என்றும் பல பேர் பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ரித்திவிகா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து ஒன்று தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியது, மறைமுக தண்டனைகள் எதற்கு? இப்படி பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குறுகிய காலத்தில் முறையான விசாரணைக்குப் பிறகு வெளிப்படையாக மரண தண்டனை விதிக்கலாம். சட்டத்தின் மூலம் சட்டம் இவர்களை தண்டிக்கலாம் என்று கூறியிருந்தார். இவருடைய கருத்துக்கு பல பேர் பாராட்டுகளையும்,இதை சட்டம் ஆக்கலாம் என்றும் பல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். உண்மையிலேயே இந்த மாதிரி மிருகங்கள் நாட்டில் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள். இவர்களுக்கு மரண தண்டனை மட்டும் தான் சரியான தீர்ப்பு என்றும் கூறிவருகிறார்கள். இனிமேல் இந்த மாதிரியான கோர சம்பவம் எங்கும் நடைபெறாத இருப்பதற்கு இந்த என்கவுண்டர் முன்னுதாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரியான தீர்ப்புகள் வந்தால் தான் நாட்டில் பெண்களுக்கு நடக்கும் அநியாயம் ஒழிக்கப்படும் என்று கூறி வருகிறார்கள்.

Advertisement