பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கியுள்ளது கடந்த வாரம் பாலாஜி மற்றும் யாஷிகா வெளியேறியதையடுத்து இறுதி போட்டிக்கும் ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் சீசன் வின்னர் யார் என்பதற்காக கடந்த ஞாயிற்றுகிழமையே வாக்களிப்புகள் துவங்கி விட்டது. பிக் பாஸ் சீசன் 2 வின்னர் யார் என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும். படு மும்மரமாக நடந்து வரும் வாக்களிப்பில் தற்போதைய நிலைமையில் யாருக்கு மக்களின் ஆதரவு அதிகம் உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கிடைத்த தகவலின்படி ரித்விகாவிற்கு தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் வாக்களிப்பில் ரித்விகாவிற்கு இதுவரை 1 கோடிக்கும் அதிமாக வாக்குகள் பதிவாகியுள்ளது. ரித்விகாவிற்கு அடுத்தபடியாக ஐஸ்வர்யாவிற்கு 60 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் ரித்விகாவிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இவர்கள் இருவரை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் விஜயலக்ஷ்மியும் (30 லட்சத்திற்கு அதிமான வாக்குகள்), இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்ற ஜனனி (20 லட்சத்திற்கு அதிமான வாக்குகள்) நான்காவது இடத்திலும் இருக்கிறார்.