கெட்-டு-கெதர் சந்திப்பு…! டேனியிடம் மன்னிப்பு கேட்ட ரித்விகா..!

0
1062
- Advertisement -

106 நாள்கள் பிக் பாஸ் வீட்டுக்குள்ளிருந்து வெற்றி பெற்ற ரித்விகாவைச் சந்தித்துப் பேசினோம். பிக் பாஸ்க்காக இந்த 3 நபர்கள்தாம் தனக்கு மிகப்பெரிய உதவி செய்துவிட்டதாக அவர் கூறினார்.

-விளம்பரம்-

bigg-boss-tamil-2-daniel

- Advertisement -

பா. இரஞ்சித் அண்ணா எப்போதுமே எனக்கு முக்கியமான ஒரு நபர். நான் வாழ்க்கையில முன்னுக்கு வரணும்னு விருப்பப்படக்கூடியவர். நான் வெற்றி பெற்றதும் `பெரு மகிழ்ச்சி’னு ட்விட்டர்ல பதிவிட்டார். அடுத்த வாரம் அவரை நேர்ல சந்திக்கப் போறேன்.

நான் பிக் பாஸ்ல கலந்துகிறதுக்கு முக்கியக் காரணம் `ஒருநாள் கூத்து’ பட இயக்குநர் நெல்சன் சார்தான். அவர்தான் என்னை ஊக்கப்படுத்தி பிக் பாஸ்ல கலந்துக்கச் சொன்னார். மேலும், பிக் பாஸ் வீட்ல நடந்த எல்லாத்துக்கும் நான் டேனியல்கிட்ட ஸாரி கேட்கிறேன். வீட்டுக்குள்ள இருக்குற வரைக்கும் டேனியல், `முகத்துக்கு நேரா ஒரு விஷயத்தை ஏன் பேச மாட்டிக்கிறார்’னு கோபத்துல இருந்தேன். அதுக்காக அவர்கூட நான் சரியாவே பேசலை. வெளிய வந்ததுக்கு அப்புறம் அவர்கிட்டயும் அவர் மனைவிகிட்டயும் கெட்-டு-கெதர்ல சந்தித்துப் பேசினேன். வீட்டுக்குள்ள இருந்துகிட்டு உங்களை வெறுத்துக்காக ஸாரி டேனியல்.” என்று வருத்தத்துடன் கூறினார் ரித்விகா.

-விளம்பரம்-
Advertisement