பிக் பாஸ் ஐஸ்வர்யா பற்றி பேசிய காயத்ரி…! என்ன இப்படி சொல்லிட்டாரே

0
254
Aishwarya

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.

இருப்பினும் தன் மீது எழும் விமர்சனங்களை மிகவும் தைரியமாக எதிர்க்கண்டு வருகிறார் காயத்ரி ரகுராம். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற காயத்ரி ரகுராம், ஐஸ்வர்யாவிற்கு தான் அதிகம் ஆதரவாக பேசி இருந்தார்.

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் ரித்விகா வெற்றியாளராகவும், ஐஸ்வர்யா இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தனர். ரித்விகா பிக் பாஸ் பட்டத்தை வென்றது பலருக்கும் மகிழ்ச்சி அளித்திருந்தாலும் ஒரு சிலர் ஐஸ்வர்யா தான் பிக் பாஸ் பட்டத்திற்கு தகுதியானவர் என்று கூறிவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யாவை புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா, உன்னை நேரில் சந்தித்தவர்களுக்கு மட்டுமே நீங்கள் இனிமையானவர் என்பதை உணர்ந்துகொள்வார்கள். நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.