கடந்த 3 மதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நேற்றுடன் (செப்டம்பர் 30) நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரித்விகா முதல் இடத்தை பெற்று சீசன் 2 வின் வெற்றியாளராக அறிவிக்கபட்டார்.
ரித்விகாவை வெற்றியாளர் என்று அறிவித்தும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரை வடித்து துள்ளி குதித்தார் ரித்விகா. அவருக்கு 50 லட்ச ருபாய் மற்றும் கோப்பையும் வழங்கபட்டது. தனது மகள் முதல் பரிசை வென்ற மகிழ்ச்சியில் மேடையின் முன்னே அமர்ந்திருந்த ரித்விகாவின் தந்தையும், அம்மாவும் மேடைக்கு வந்து ரித்விகாவை கட்டி அணைத்து பாராட்டினார்.
பின்னர் மேடையில் பேசிய ரித்விகாவின் தந்தை, தமிழ் ரசிகர்களுக்கும், பிக் பாஸ்ஸிற்கும், எங்களுடைய கமல் சாருக்கும் கோடான கோடி நன்றி. 16 குழந்தைகளுக்கும் ஒரு ஆசானாக இருந்து எல்லா விசயத்தையும் சொல்லி கொடுத்தது இவர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். அது உலக அனுபவம் என்பதை விட உலக நாயகனின் அனுபவம் என்றே சொல்லலாம்.
இவ்வளவு பெரிய மக்கள் சபையில் நான் பேசியதே கிடையாது. அதுவும் உலக நாயகன் கூட நான் பேசுகிறேன் என்றால் இதற்கெல்லாம் நான் என்ன புண்ணியம் செய்து என் மகளை பெற்றுள்ளேன் என்பது எனக்கே தெரியவில்லை என்று மிகவும் உருக்கமாக பேசி இருந்தார்.