நான் தலித் இல்லை. நானும் ஆதிக்க சாதியில் பிறந்தவள் தான் – ஆனால். ரித்விகா ஷாக்கிங் பதிவு.

0
1757
Rithvika
- Advertisement -

சமுதாயத்தில் இருக்கும் ஜாதிகளை ஒழிக்க பலரும் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர் ஆனாலும் ஜாதிக் கொடுமைகள் ஜாதி கௌரவக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கருப்பர் கூட்டம் விவகாரம், பெரியார் சிலை மீது காவி சாயம் போன்ற பல்வேறு சர்ச்சைகளும் நாம் கடந்து தான் வந்திருக்கிறோம். இப்படி ஒரு நிலையில் நடிகை ரித்விகாவின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு சமூக வலைதள வாசி ஒருவர் மோசமாக கமன்ட் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இதற்கு இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர் ‘பருவத்தில் பன்னி கூட அழகா தான் இருக்கு எஸ்சி (sc )பெண்களே’ என்று ரித்விகாவின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு படுமோசமான கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த ரித்திவிகா சரிங்க மிஸ்டர் பாடு, சாரி மிஸ்டர் மாடு என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தன்னை Sc என்று குறிப்பிட்ட அந்த ரசிகரின் கமென்டிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள ரித்விகா, இது போன்று எனக்கு வரும் விமர்சனங்கள் புதிதல்ல. இதற்கும் இனி வருமின் அதற்கான பதிலாகவும் என்று ‘தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய அப்பாக்கியம் நான் அடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிக ஆதிக்க சாதிகளில் பிறந்தவர்தான். வருந்துகிறேன். இனியாவது சாதிகள் அற்ற சமூகமாக மனிதர்களாக வாழ முயற்சிப்போம்.

நிற்க, ஒரு வகையில் நானும் தலித் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனில் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. ஆம் தலித் , என்னை தலித்தாக்கிய பிழையும் பாவமும் தங்கள் இனத்தையே சாரும. மற்றபடி என் அழகை பாராட்டியதற்கு நன்றி. பின்குறிப்பு : தலித் பெண்கள் என்னை விட அழகு என்று குறிப்பிட்டு இருக்கிறார் ரித்விகா’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement