ரம்யா பாண்டியனை போல மொட்டை மாடி போட்டோ ஷூட் – ரித்விகாவா இப்படி ஒரு மாடர்ன் கோலத்தில்.

0
3981
Rithvika
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல்வேறு போட்டியாளர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொண்டனர். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில நடிகர் நடிகைகளை பங்கு பெறச் செய்வது வழக்கம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்திவிகா மூன்றாவது சீஸனில் முகென் என்று பட்டம் வென்ற பலருக்கு சினிமா துறையில் நுழைவதர்க்கான பாதையை வகுத்து கொடுத்துள்ளது பிக் பாஸ். ஆனால், பிக்பாஸ் பட்டத்தை வென்று யாருக்கும் இதுவரை பெயர் சொல்லும்படியான எதிர்காலம் அமைய வில்லை என்பது தான் உண்மை.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் நடிகை ரித்திகா. பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான பரதேசி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு சிறந்த துணை நடிகை என்பதற்கான விருதுகளும் கிடைத்திருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

- Advertisement -

பின்னர் இவருக்கு 2018 ஆம் ஆண்டு வெளியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பெயர் சொல்லும்படியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும், இவருக்கு கிடைத்தது எல்லாம் மூன்றாம் நிலை கதாபாத்திரம் தான். சமீபத்தில் வெளியான குண்டு படத்தில் கூட இவருக்கு அப்படிபட்ட கதாபாத்திரம் தான் வழங்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி ஹீரோயினாக இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. கதாநாயகிகள் போன்று போட்டோ ஷூட் நடத்தி வரும் ரித்விகா சமீபத்தில் மொட்டை மாடியில் கிளாமரான உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். ஏற்கனவே மொட்டை மாடி போட்டோ ஷூட் நடத்தி ரம்யா பாண்டியன் பெரும் பிரபலமானார் தற்போது இவரும் அதே ரூட்டை பின்பற்றி வருகிறார் போல.

-விளம்பரம்-
Advertisement