நீண்ட இடைவேளைக்கு பின் சித்தப்புவை சந்தித்த போட்டியாளர்.. புகைப்படத்தை வெளியிட்ட ரித்விகா..

0
8365
rithvika
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி தான் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற நிகழ்ச்சியாக திகழ்ந்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சமீபத்தில்தான் நிறைவடைந்தது. இதில் முகென் முதல் இடத்தையும் சாண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தனர். மேலும், இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்தாலும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பல்வேறு சுவாரஸ்யமான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டார்கள். அதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் பொன்னம்பலம், மும்தாஜ், ரித்திகா, ஜனனி அய்யர் மகத் போன்ற ரசிகர்களுக்கு பரிட்சியமானநடிகர் நடிகைகள் இந்த சீசனில் கலந்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

மிகவும் பரபரப்பாக சென்ற பிக் பாஸின் இரண்டாவது சீசனில் முதல் இடத்தை ரித்விகாவும் இரண்டாவது இடத்தை ஐஸ்வர்யாவும் பிடித்திருந்தார்கள். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் முரட்டுத் தனமான ஒரு போட்டியாளர்கள் இருப்பார்கள் அந்த வகையில் முதல் சீசனில் கஞ்சா கருப்பும் இரண்டாவது சீசனில் பொன்னம்பலமும் மூன்றாவது சீஸனில் சரவணனும் இடம் பெற்று இருந்தார்கள். இவர்கள் மூவருமே பிக் பாஸ் வீட்டில் சர்ச்சைகளில் சிக்கியவர் தான். அந்த வகையில் கடந்த சீசனில் பங்குபெற்ற பொன்னம்பலம் யாஷிகா மற்றும் சில பெண்கள் அணியும் ஆடைகள் குறித்து விமர்சனத்தை தெரிவித்து வம்பில் மாட்டிக் கொண்டார். இருப்பினும் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களுக்கு ஒரு சித்தப்பா போல தான் இருந்து வந்தார்.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட சரவணனை தான் போட்டியாளர்கள் சித்தப்பு என்று செல்லமாக அழைத்தார்கள். ஆனால், இவரைப் போலவே இரண்டாம் சீசனில் கலந்துகொண்ட பொன்னம்பலத்தில் சக போட்டியாளர்கள் சித்தப்பா என்று தான் அழைத்தார்கள். தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக இருந்த பொன்னம்பலம் பின்னர் காமெடி கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் துவங்கினார். தற்போதும் பல படங்களில் காமெடி வில்லனாகவே நடிகர் பொன்னம்பலம் நடித்தும் வருகிறார். பொன்னம்பலம் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தன் வாழ்வில் ஏற்பட்ட பல கஷ்டங்களை பகிர்ந்திருந்தார் அதனைக் கேட்ட ரசிகர்கள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார்கள்.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் முன்னாள் பிக் பாஸ் சீசன் கலந்துகொண்ட போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடந்த முடிந்த மூன்றாவது சீஸனில் இரண்டாம் சீசனில் கலந்து கொண்ட மஹத், ஐஸ்வரியா, யாஷிகா, ஜனனி, ரித்விகா என்றும் பலரும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தார்கள். ஆனால், பொன்னம்பலம் மற்றும் ஒரு சிலர் அதில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் பொன்னம்பலத்தை பிரபல காமெடி நடிகர் கணேஷ்கர், ஆர்த்தி, ரித்விகா, செந்தில், வைய்யாபுரி ஆகியோர் சந்தித்தனர். அந்த புகைப்படத்தை ரித்விகா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிறைவடைந்து நீண்ட மாதங்களுக்கு பின்னர் சீசன் 2வின் சித்தப்பாவை சந்தித்துள்ளார்கள். மேலும், சித்தப்பாவுடன் என்ற ஒரு ஸ்டேட்டஸ்சையும் பதிவிட்டுள்ளார் ரித்விகா. நீண்ட காலத்திற்கு பின்னர் பொன்னம்பலத்தை கண்டதால் ரசிகர்கள் கொஞ்சம் குஷியாகியுள்ளார்கள்.

-விளம்பரம்-

Advertisement