பிக்பாஸ் 2 வெற்றியாளர் இவர்தான்..! யார் தெரியுமா..?

0
428
Bigg-boss

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது கடந்த வாரம் பாலாஜி மற்றும் யாஷிகா வெளியேறியதையடுத்து இறுதி போட்டிக்கும் ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா ஆகியோர் முன்னேறியிருந்த நிலையில் வெற்றியாளர் யார் என்ற தகவல் தற்போது கிடைக்கபெற்றுள்ளது.

bigg-boss-tamil-2-rithvika

இந்த நிகழ்ச்சியின் சீசன் வின்னர் யார் என்பதற்காக கடந்த ஞாயிற்றுகிழமையே வாக்களிப்புகள் துவங்கி விட்டது. படு மும்மரமாக நடந்து வரும் வாக்களிப்பில் தற்போதைய நிலைமையில் யாருக்கு மக்களின் ஆதரவு அதிகம் உள்ளது என்ற தகவல் தகவலை விஜய் தொலைக்காட்சியிலேயே அடிக்கடி வெளியிட்டு வந்தனர். ஆனால், நேற்றுடன் யாருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்ற தகவலைவெளியிடுவதை நிறுத்தி விட்டனர்.

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி ரித்விகாவிற்கு தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த வாக்களிப்பில் ரித்விகாவிற்கு இதுவரை 1 கோடிக்கும் அதிமாக வாக்குகள் பதிவாகியுள்ளது. ரித்விகாவிற்கு அடுத்தபடியாக ஐஸ்வர்யாவிற்கு 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Rithvika

எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2வின் வின்னர் ரித்விகா என்பதில் எந்த வித ஐயமும் இல்லாமல் இருக்கிறது. ஆரம்பம் முதலே மிகவும் உஷாராக விளையாடி வந்த ரித்விகா இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வருகிறார். இவரது தனது சாதுவான குணத்தால் ரசிகர்களின் பேராதரவை பெற்று சீசன் 2 நிகழ்ச்சியின் பட்டத்தை வென்றுள்ளார் ரித்விகா.