-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

அதுக்கு அப்புறம் தான் சொந்த வீடு கனவு நிறைவேறியது – பிக் பாஸ் ரித்விகா Home Tour வீடியோ.

0
626
rithvika

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல்வேறு போட்டியாளர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொண்டனர். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில நடிகர் நடிகைகளை பங்கு பெறச் செய்வது வழக்கம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்திவிகா மூன்றாவது சீஸனில் முகென் என்று பட்டம் வென்ற பலருக்கு சினிமா துறையில் நுழைவதர்க்கான பாதையை வகுத்து கொடுத்துள்ளது பிக் பாஸ்.

-விளம்பரம்-

ஆனால், பிக்பாஸ் பட்டத்தை வென்று யாருக்கும் இதுவரை பெயர் சொல்லும்படியான எதிர்காலம் அமைய வில்லை என்பது தான் உண்மை.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் நடிகை ரித்திகா. பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான பரதேசி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

முதல் படம் :

அதன்பின்னர் மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு சிறந்த துணை நடிகை என்பதற்கான விருதுகளும் கிடைத்திருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் இவருக்கு 2018 ஆம் ஆண்டு வெளியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

சினிமா வாய்ப்பு :

-விளம்பரம்-

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பெயர் சொல்லும்படியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும், இவருக்கு கிடைத்தது எல்லாம் மூன்றாம் நிலை கதாபாத்திரம் தான். சமீபத்தில் வெளியான குண்டு படத்தில் கூட இவருக்கு அப்படிபட்ட கதாபாத்திரம் தான் வழங்கப்பட்டது.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி ஹீரோயினாக இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

Home Tour வீடியோ :

இந்த நிலையில் ரித்விகா தன்னுடைய Home Tour வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சென்னையில் தாய், தந்தையுடன் வசித்து வரும் ரித்விகா தன்னுடைய அழகான வீட்டை ஹோம் டூராக யூடியூப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார்.மிகப்பெரிய வீட்டில் எல்லாம் விரும்பம் இல்லை என்பதால் அடக்கமான பட்ஜெட்டுக்கு ஏற்ற வீட்டையே தேர்வு செய்ததாகவும் ரித்விகா கூறியுள்ளார்.

மேலும், சொந்த வீடு கனவை திரைத்துறைக்கு வந்த பிறகு அடைய முடிந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ரித்விகா.தன்னுடைய வீட்டிலேயே அதிகம் பிடித்த இடம் தன்னுடைய அறைதான் என்றும், படம் பார்ப்பது, எதாவது எழுதுவது என தான் அறையிலேயேதான் இருப்பேன் என ரகசியத்தை தெரிவித்துள்ளார் ரித்விகா. ரித்விகாவின் இந்த Home Tour வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news