தலித் மக்களை மட்டும் தான் ரஞ்சித் படங்களில் தேர்வு செய்கிறாரா – ரித்திகா விளக்கம்.

0
2909
ranjith

சமுதாயத்தில் இருக்கும் ஜாதிகளை ஒழிக்க பலரும் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர் ஆனாலும் ஜாதிக் கொடுமைகள் ஜாதி கௌரவக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கருப்பர் கூட்டம் விவகாரம், பெரியார் சிலை மீது காவி சாயம் போன்ற பல்வேறு சர்ச்சைகளும் நாம் கடந்து தான் வந்திருக்கிறோம். இப்படி ஒரு நிலையில் நடிகை ரித்விகாவின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு சமூக வலைதள வாசி ஒருவர் மோசமாக கமன்ட்செய்திருந்தார்.

சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இதற்கு இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர் ‘பருவத்தில் பன்னி கூட அழகா தான் இருக்கு எஸ்சி (sc )பெண்களே’ என்று ரித்விகாவின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு படுமோசமான கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த ரித்திவிகா சரிங்க மிஸ்டர் பாடு, சாரி மிஸ்டர் மாடு என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தன்னை Sc என்று குறிப்பிட்ட அந்த ரசிகரின் கமென்டிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள ரித்விகா, இது போன்று எனக்கு வரும் விமர்சனங்கள் புதிதல்ல. இதற்கும் இனி வருமின் அதற்கான பதிலாகவும் என்று ‘தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய அப்பாக்கியம் நான் அடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிக ஆதிக்க சாதிகளில் பிறந்தவர்தான். வருந்துகிறேன். இனியாவது சாதிகள் அற்ற சமூகமாக மனிதர்களாக வாழ முயற்சிப்போம்.

நிற்க, ஒரு வகையில் நானும் தலித் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனில் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. ஆம் தலித் , என்னை தலித்தாக்கிய பிழையும் பாவமும் தங்கள் இனத்தையே சாரும. மற்றபடி என் அழகை பாராட்டியதற்கு நன்றி. பின்குறிப்பு : தலித் பெண்கள் என்னை விட அழகு என்று குறிப்பிட்டு இருக்கிறார் ரித்விகா’ என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-59.jpg

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரித்விகா பேசுகையில் நான் அப்படி பதிவிட்டதை கண்டு பலரும் என் மீது இருக்கும் அந்த தலித் முத்திரையை போக்க நான் அப்படி பதவிட்டதாக நினைக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் நான் அப்படி எழுதியதின் நோக்கத்தை புரிந்து கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.Sc பெண்கள் எல்லாம் கருப்பாக தான் இருப்பார்களா என்று கூறியுள்ளார். மேலும், ரஞ்சித்துடன் தொடர்ந்து படங்களில் நடிப்பதால் தான் இப்படி உங்களுக்கு கமெண்ட்கள் வருகிறதா என்று கேட்கப்பட்டதற்கு, ரஞ்சித் சார் அப்படி ஒன்றும் கிடையாது. தலித் இனத்தில் இருந்த மட்டும் அவர் நடிகர்களை தேர்வு செய்வது கிடையாது என்று கூறியுள்ளார்.

Advertisement