ராபர்ட் மாஸ்டர் அக்காவின் தற்போதைய நிலை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமா உலகில் மிக பிரபலமான நடன இயக்குனராக பணியாற்றியவர் ராபர்ட் மாஸ்டர். இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் படங்களில் மட்டும் இல்லாமல் நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக பணியாற்றி இருக்கிறார். மேலும், ராபர்ட் மாஸ்டரை பற்றி வெளியில் தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதாவின் விஷயத்தில் தான்.
இருவரும் காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் வைத்து இருக்கிறார். காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் அக்காவின் தற்போதைய நிலை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது.
ராபர்ட் மாஸ்டர் அக்கா:
ராபர்ட் மாஸ்டர் அக்கா வேற யாரும் இல்லைங்க, அவரும் மிகப் பிரபலமான டான்ஸர், நடிகையுமான அல்போன்சா. இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் 90 மற்றும் 2000 காலகட்டத்தில் முன்னணி ஐட்டம் டான்சராக சினிமா உலகில் வலம் வந்தவர். இவர் 1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த பாட்ஷா படத்தில் வரும் ரா ரா ராமையா பாடலில் ஐட்டம் டான்சராக தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமாகிறார்.
அல்போன்சா திரைப்பயணம்:
இவர் கமல் நடிப்பில் வெளிவந்த பஞ்சதந்திரம் படத்தில் சைடு ரோல் பண்ணி இருந்தார். அதன் பின் இவர் தமிழில் சேர சோழ பாண்டியன், தாயின் மணிக்கொடி, பெரிய மனுஷன், சிவன் போன்ற பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தில், பத்ரி, காதல் சடுகுடு போன்ற படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆட இருக்கிறார். இவர் படங்களில் நடித்தும், நடனமாடியும் இருந்தார். இப்படி இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருந்தார்.
அல்போன்சா காதல்:
இதன் இடையே இவர் நடிகர் வினோத்துடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது. இருவரும் பல ஆண்டுகாலம் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். வினோத் கவசம் என்ற படத்தின் நடித்து இருந்தார். பண பிரச்சனையால் இந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் மணமுடைந்தவர் 2012ல் தற்கொலை செய்து கொண்டிருந்தார். வினோத்தின் பிரிவை தாங்க முடியாமல் அல்போன்சா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். ஆனால், வினோத்தை ராபர்ட் மற்றும் அல்போன்ஸா தான் கொலை செய்துவிட்டார்கள் என்று வினோத்தின் தந்தை கமிஷ்னர் அலுவலத்தில் புகார் அளித்தார்.
அல்போன்சா நிலைமை:
அதற்கு சினிமாவிலேயே கொஞ்சம் காலம் தலைகாட்டாமல் இருந்தார். அது மட்டும் இல்லாமல் 2015 ஆம் ஆண்டு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கும் அல்போன்சா முயற்சி இருந்தார். எப்படியோ அவரைக் காப்பாற்றி விட்டார்கள். இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு அல்போன்சா தன் மகளுடன் வசித்து வரும் தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருந்தது. அதற்கு பிறகு இவர் என்ன ஆனார்? எங்கிருக்கிறார்? என்ற தகவல் தெரியவில்லை. தற்போது பிக் பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் ராபர்ட் மாஸ்டரும் தன்னுடைய அக்கா குறித்து எந்த ஒரு தகவலையும் கூறவில்லை.