‘செருப்பால அடிப்பேன்’ – ராபர்ட் மற்றும் தனலட்சுமி இடையே வெடித்த சண்டை. என்ன பிரச்சனை ? வீடியோ இதோ.

0
261
Dhana
- Advertisement -

மீண்டும் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சையில் சிக்கிய தனலட்சுமி. வைரலாகும் ராபர்ட் மாஸ்டர்- தனலட்சுமி சண்டை வீடியோ. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி மூன்றாவது வாரம் முடிந்து நான்காவது வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதோடு இந்த முறை நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் கலவரம் தொடங்கி விட்டது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து தன் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இது பலருக்குமே அதிர்ச்சியை தந்திருந்தது. இவரை தொடர்ந்து முதல் எவிக்சன் நடந்தது. அதில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் இரண்டாவது எவிக்ஷனில் அசல் வெளியேறி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இதுவரை நடந்து முடிந்த மூன்று வாரங்களில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் தனலட்சுமி தான் சிக்கி இருந்தார்.

தனலட்சுமி குறித்த தகவல்:

இவர் டிக் டாக் பிரபலம். சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில குறும்படங்களிலும் பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இருந்தாலும், தனலட்சுமி பக்கம் நியாயம் இருக்கிறது என்று கமலும் மக்களும் அவருக்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள். கடந்த மூன்றாவது வார நிகழ்ச்சியில் தனலட்சுமி மீது எந்த தவறும் இல்லை என்று கமல் பாராட்டி இருந்தார்.

-விளம்பரம்-

ராபர்ட் மாஸ்டர் – தனலட்சுமி சண்டை:

இதனை அடுத்து வழக்கம்போல் நான்காவது வாரம் தொடங்கி பிக் பாஸில் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் மற்றும் தனலட்சுமி இடையே பிரச்சனை எழுந்திருக்கிறது. அதாவது, தனலட்சுமி பெட்டில் படுத்து தூங்க நினைத்திருக்கிறார். அப்போது ராபர்ட் மாஸ்டர் வேண்டாம் தனம், தூங்கினால் நாய் குறைக்கும் என சொன்னார். உடனே தானம், அதை நீங்க சொல்லாதீங்க. நான் சாப்பிடுறது, தூங்குறது எல்லாத்தையும் யாரும் பார்த்து கொண்டே இருக்க வேணாம் என்று தனலட்சுமி கூறியிருந்தார்.

வைரலாகும் வீடியோ:

நீ யாரை சொன்ன செருப்பால் அடிப்பேன் என்று மாஸ்டர் சண்டைக்கு போயிருக்கிறார். உடனே இருவருக்கும் வாக்குவாதம் முற்றிருக்கிறது. அதன்பின் இவர்கள் இருவரையும் சிவின் கணேசன்,மற்ற போட்டியாளர்கள் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வாரமும் குறும்படம் இருக்கு என்று கேட்டு வருகின்றனர்.

Advertisement