சொந்த பொண்ணு கிட்ட அங்குள்க்கு Bye சொல்லுன்னு சொன்னாங்க – ராபர்ட் மாஸ்டரின் மனைவி குறித்து பேசிய பெற்றோர்கள்.

0
647
robert
- Advertisement -

பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியானது கடந்த மாதம் தொடக்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பிக் பாஸ் சீசனில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த போட்டியாளர்களில் ராபர்ட் மாஸ்டரும் ஒருவர். இவர் கடந்த சில நாட்களாகவே சின்னத்திரை நட்சத்திரமான ரட்சித்தவிடம் பல சிலுமிச வேலைகளை செய்து வருகிறார். இதனால் இவரின் மீது பல விமர்ச்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் ராபர்ட் மாஸ்ட்டர் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் உள்ளார். இந்நிலையில் அவரின் பெற்றோர்கள் பிரபல பத்திரிக்கை சேனலுக்கு போட்டியளித்திருந்தனர் அதில் அவர்கள் பல உண்மைகளை பகிர்ந்திருந்தனர்.

-விளம்பரம்-
robert

ராபர்ட் மாஸ்டரின் தந்தை நடன இயக்குனர் மற்றும் சண்டை பயிற்சியாளர் மற்றும் தாய் ஓமனா அவர். இவர்கள் தன்னுடைய மகனுக்கு உப்புமாவே பிடிக்காது என்று ராபர்ட் மாஸ்டரை பற்றி கூற ஆரம்பித்தனர். ராபர்ட் மாஸ்டர் வீட்டில் மிகவும் செல்லப்பிள்ளை எப்போது பார்த்தாலும் குறும்புகளை செய்துகொண்டே இருப்பர், ஆனால் அவர் பிக் பாஸ் வீட்டில் அமைதியாக இருக்கிறார் ஏனென்றால் அவர் தனக்கான வாய்ப்பு வரும் வரை காத்துக்கொண்டிருக்கிறார்.

- Advertisement -

ராபர்ட் அமைதிக்கு காரணம் :

நான் எத்தனையோ படங்களில் கோரியோகிராப் செய்திருக்கிறேன் ஆனால் என்னுடைய மகன் ராபர்ட் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் பெரியவர் என்பதினால் ஒருவேளை மற்ற போட்டியாளர்கள் இவருடன் வம்பு இழுக்காமல் இருக்கின்றனர். அதனால் தான் ராபர்ட்டும் அமைதியாக இருக்கிறார். ஒரு வேளை மற்றவர்கள் அவருடன் வம்புக்கு வந்தால் அவர் சும்மா விட மாட்டார் எனக் கூறினார்.

ராபர்ட் – ரட்சிதா விவகாரம் :

ராபர்ட் எப்போதுமே எல்லோருடனும் அன்பாக பழகுவார், இதனால் தான் பிக் பாஸ் வீட்டிலும் அப்படி ரட்சித்தாவிடம் பழகி வருகிறார். இது காதலாக இருக்க வாய்ப்பில்லை. ராபர்ட்டை பற்றி தெரியாதவர்கள் ஒருவேளை அவர் செய்வதையெல்லாம் பார்த்தால் அப்படித்தான் தோன்றும் ஆனால் அவர் அப்படிதான் மற்றவர்களுடன் கலகலப்பாக பழகுவார். அவருடைய வாழ்க்கையில் ஏற்கனவே அதிக பிரச்சனைகள் இருக்கின்றது.

-விளம்பரம்-

அதோடு இந்த பிரச்னையையும் சேர்க்க மாட்டார் என்று நினைக்கிறேன். மேலும் அவர் அசைவம் இல்லாமல் சாப்பிட மாட்டார் ஆனால் பிக் பாஸ் வீட்டில் இததெல்லாம் பொறுத்துக்கொண்டு பொறுமையாக இருந்து வெற்றி பெற வேண்டும் என்று விளையாடி வருகிறார். அதோடு இவருடன் போட்டியாளரான விக்ரமனும் கடைசி நாள் வரை செல்வார் என்று நினைக்கிறன் என்று ராபர்ட் மாஸ்டரின் தந்தை கூறினார்.

23 வயதில் காதலி :

ரட்சிதா விவகாரத்தை தொடர்ந்து ராபர்ட் மாஸ்டரின் காதலியை பற்றி பேசிய அவரின் பெற்றோர்கள்`ராபர்ட் எனக்கு காதலி இருக்கிறார் என்று சொன்னதும் எங்களுக்கே அதிர்ச்சியாகி விட்டது. ஆனால் ராபர்டுக்கு ஏற்கனவே 20 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவருடைய அம்மா சின்ன வயதிலேயே பிரிந்து விட்டார். அவர் தற்போது வேறொரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் அதனால் தான் அவருடைய பெயரை சொல்ல விரும்பவில்லை. மேலும் ராபர்ட் கூறுகையில் என்னுடைய் மகள் நான் இறந்த பிறகு என்னுடைய தலை பக்கத்தில் இருந்தால் போதும் என்று என்னிடம் ராபர்ட் கூறி பலமுறை அழுதிருக்கிறார். அதனை பார்த்தால் எங்களை அறியாமல் நாங்களும் அழுது விடுவோம் என்று கூறினார்.

ராபர்ட்டை ஏமாற்றி விட்டார்கள்:

பிக் பாஸ் போவதற்கு முன்னர் சில படங்கள் எடுத்தார். அப்படம் முடியும் தருவாயில் இருக்கும் போது அதில் இருக்கும் மற்றொரு கூட்டாளி என்னுடைய பணத்தை கொடுத்து விடுங்கள் இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றுள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர், கதாநாயகன் அனைத்தும் ராபர்ட் தான் என்றதினால் கர்வத்திற்காகவும், பிரச்சனை வேண்டாம் என்றும் பணத்தை திருப்பி கொடுப்பதாக கையெழுத்து போட்டு கொடுத்தார். இந்த கடனை அடைப்பதற்காகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறார் என்று ராபர்ட் மாஸ்டரை பற்றிய பல விஷியங்களை அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தனர் அவருடைய பெற்றோர்கள்.

Advertisement