மயக்கும் குரல்,கோடிக்கணக்கில் மோசடி – 10 மாதம் போலீசுக்கே டிமிக்கி கொடுத்து வந்த ராபர்ட் மாஸ்டர் சகோதரி கைது.

0
800
Robertmaster
- Advertisement -

ராபர்ட் மாஸ்டரின் சகோதரியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சினிமா உலகில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருந்தவர் அல்போன்சா. இவரது தம்பி தான் ராபர்ட் மாஸ்டர், மேலும், இவருக்கு சோபா வசந்த் என்ற சகோதரியும் இருக்கிறார். இவர் சென்னை வளசரவாக்கத்தில் சொந்தமாக பிசினஸ் ஒன்று செய்து வருகிறார். இதில் அவர் பல வருடமாக பிளாஷ் கன்சல்டேஷன் என்ற பெயரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்காக இவர் நிறைய கவர்ச்சி விளம்பரங்களையும் செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் பல பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி இருக்கிறார். சிங்கப்பூர், கனடா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் மூன்று லட்சம் ரூபாய் மாத சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக விளம்பரங்களை செய்து இருக்கிறார். இந்த விளம்பரத்தை பார்த்த பலருக்குமே வெளிநாடுகளில் வேலைக்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்டு பலர் சோபாவிடம் நேரடியாக போனை மூலம் விசாரித்தார்கள். பலர் தங்களுடைய மகன், மகள் உறவினர்களுக்கு வேலை வேண்டும் என்றும் சோபாவிடம் கேட்டு இருந்தார்கள்.

- Advertisement -

கவர்ச்சி நடிகை சகோதரி:

இப்படி தன்னை அணுகும் அனைவரையும் பேச்சாலையே சோபா மயக்கி விடுவார். அவர் மீது துளி சந்தேகம் கூட வராத அளவிற்கு நடந்து கொள்வாராம். பின் அவர்களுடைய மனதில் இருக்கும் ஆசையை அதிகமாக தூண்டி தன் மீது நம்பிக்கையும் வளர்த்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி இருக்கிறார் சோபா. இதே போல் பொதுமக்கள் பலர் இவரிடம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து இருக்கின்றனர். அதற்குப் பிறகு சோபா தன்னுடைய வேலையை காண்பித்து விடுவார். இது குறித்து பல புகார்கள் எழுந்து இருக்கின்றது.

சோபா நடத்திய பிசினஸ்:

பணம் கொடுத்தவர்கள் வளசரவாக்கத்தில் இருக்கும் அவருடைய ஆபீசுக்கு நேரே சென்று விசாரித்து இருக்கிறார்கள். அப்போது சோபா 6 மாதத்தில் வேலை கிடைத்துவிடும் என்று கூறி இருக்கிறார். ஆனால், வேலை கிடைக்கவில்லை. பின் கொடுத்த பணத்தையும் சோபா திருப்பி தரவில்லை. பொதுமக்கள் பணத்தை திருப்பி கேட்டால் அவர் தரவில்லை. இதனால் நாளுக்கு நாள் தொந்தரவு அதிகமானதால் சோபா வளசரவாக்கம் ஆபிஸை மூடிவிட்டு வேறு ஒரு இடத்திற்கு சென்று விட்டார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து போலீசில் புகார் அளித்திருக்கின்றார்கள்.

-விளம்பரம்-

சோபா செய்த மோசடி:

அது மட்டும் இல்லாமல் ஒரு whatsapp குழுவையும் அமைத்து சோபாவை அவருக்கே தெரியாமல் தீவிரமாக தேடி வந்து இருந்தார்கள். இறுதியாக அவர் நொளம்பூர் பகுதியில் ஆபீஸ் இருப்பது தெரியவந்து மொத்த பாதிக்கப்பட்ட மக்களும் சென்று விட்டனர். அப்போது சோபா பல காரணங்களை சொல்லி பணத்தை தராமல் இருந்து இருக்கிறார். அதோடு கடந்த வருடம் மார்ச் மாதம் எல்லோருக்கும் கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்றும் கூறியிருந்தார். இதை நம்பி மக்கள் சென்று விட்டனர். வழக்கம்போல் சோபா தன்னுடைய வேலையை காண்பித்து விட்டார். அந்த ஆபீசையும் மாற்றிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

கைதான சோபா:

செல்போன் முதல் எல்லா தடையங்களையும் சோபா மறைத்துவிட்டு சோபா தலைமறைவாகிவிட்டார். பாதிக்கப்பட்ட பல பேர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் சோபா மீது புகார் தந்திருந்தனர். இந்த புகாரின் பேரில் போலீஸ் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தற்போது கேளம்பாக்கத்தில் ஒரு லாட்ஜில் ஷோபா தங்கி இருக்கிறார். அங்கு சென்று போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து இருக்கின்றனர். இந்த தகவலை அறிந்த உடன் சோபாவால் ஏமாற்றப்பட்ட இன்னும் பலர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் படையெடுத்து வந்து கதறி அழுகின்றனர். இப்படி சோபாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. போலீசாரம் தீவிரமாக சோபாவிடம் விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement