பிக் பாஸ் வாய்ப்பை வனிதா வாங்கி கொடுத்தாரா ? – தனது ஸ்டைலில் படு கூலாக பதில் அளித்த ராபர்ட் மாஸ்டர்.

0
371
robert
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கி 52 நாட்களை கடந்து இருக்கிறது.இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி இருக்கின்றனர். மேலும், இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான சில முகங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகம் தான்.

-விளம்பரம்-

இவர் மிக பிரபலமான நடன இயக்குனர் ஆவார். ராபர்ட் மாஸ்டர் பற்றி முகம் தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதா விஷயத்தில் தான். இருவரும் காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார் ராபர்ட் மாஸ்டர். ஆரம்பத்தில் இவர் சினிமாவில் நடன இயக்குனராக கொடி கட்டி பறந்து இருந்தார். பின் இடையில் இவருக்கு வாய்ப்புகள் பெரிதாக வராததால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

- Advertisement -

பின் இவர் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதற்கு பின் தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் வைத்து இருந்தார் . காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லாமல் இருந்தது. இதனால் இவரை பலரும் திட்டி தீர்த்தனர்.

அதிலும் பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் இருந்தபோது அவரைப் பற்றி தொடர்ந்து விமர்சித்து வந்தார் வனிதா. அதிலும் குறிப்பாக ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் நடந்து கொண்ட விதத்தைக் கண்டு வனிதா அடிக்கடி கழுவி ஊற்றி வந்தார். மேலும், ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல தான் காரணம் என்றும், நான் தான் அவரை பிக் பாஸுக்கு அனுப்பி வைத்தேன். மேலும், அங்கு சென்றால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவனுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாகவும் வனிதா கூறி இருந்தார் வனிதா.

-விளம்பரம்-

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராபர்ட் மாஸ்டர் வனிதா குறித்து பேசுவேன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக வனிதாவிடம் தான் போனில் பேசியது உண்மைதான் எனக்கு சாண்டி மாஸ்டர் கூட தெரியும் தான். அவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான். ஆனால், அவருடன் எனக்கு பெரிதாக பழக்கம் இல்லை என்பதால் பிக் பாஸ் இருக்கு இரண்டு முறை சென்று வந்த வனிதாவிடம் போன் செய்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கேட்டேன். நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்பது பல ஆண்டு கனவு. ஹிந்தியில் எல்லாம் அனைத்து பிக் பாஸ் சீசன் களையும் நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால், வனிதா தான் எனக்கு பிக் பாஸ் வாய்ப்பை வாங்கி கொடுத்தார் என்பதெல்லாம் பொய் என்று கூறியிருக்கிறார். அதேபோல பிக் பாஸ் விமர்சனம் என்ற பெயரில் வனிதா, ராபர்ட் மாஸ்டர், ரட்சிதாவிடம் நடந்து கொள்ளும் விதத்தைக் கண்டு திருமணம் ஆகி மகள் இருக்கும் நபர் இப்படி எல்லாம் செய்யலாமா ? இதேல்லாம் அசிங்கமாக இல்லையா என்று கூறி இருந்தது குறித்து ராபர்ட் மாஸ்டர் பேசுகையில் திருமணமாகி இப்படி நடந்து கொள்வது அசிங்கமாக இருக்கிறது என்பதை இவர் சொல்வது தான் வேடிக்கையாக இருக்கிறது. இவர் என்ன செய்தார் என்பது எல்லாருக்குமே தெரியுமே என்று கூறியிருக்கிறார் ராபர்ட் மாஸ்டர்.

Advertisement