‘காக்கா முட்ட படத்தின் வாய்ப்பை மிஸ் பண்ணது கரெக்ட்னு தான் தோணுச்சு’ – பிக் பாஸ் 2 நடிகை கொடுத்த ஷாக்.

0
2366
aishwarya
- Advertisement -

தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறனுடன் இணைந்து பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்து வெளியிட்ட, ‘காக்கா முட்டை’ படம் பெரும் வெற்றியைப் பெற்றுதுடன் பல்வேறு வசூல் சாதனைகளையும் செய்தது.எம்.மணிகண்டன் இயக்கிய இந்த படம் பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது. இந்த படத்தில் நடித்திருந்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.அத்தோடு இந்த படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் நல்ல புகழை ஏற்படுத்தி தந்தது.

-விளம்பரம்-

இளம் வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவரது தைரியத்தை பலரும் பாராட்டினர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பும் வந்தும் அதனை தவறவிட்டுள்ளார் நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான ரித்திகா கூறியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : ரம்யா பாண்டியனை வைத்து படம் எடுத்த சூர்யா – சீமானை சீண்டியதால் சூர்யாவை தெலுங்கர் என்று திட்டி தீர்க்கும் தொண்டர்கள்.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, நான் திரையுலகிற்கு வந்து இரண்டாவது படமே காக்கா முட்டை படம். என்னுடன் இருந்தவர்கள் என்னை இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். எனக்கும் அந்த படத்தில் நடிக்க உடன்பாடில்லை. எனக்கு பிறகு பல பேரிடம் அந்த கதையை சொல்லி கடைசியாக தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். படம் வெளிவந்த பிறகு தான் ஐயோ! இந்த படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று நான் நிறைய முறை பீல் பண்ணி இருக்கேன்.

அந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் நம்ம நடத்தி இருந்தால் நன்றாக இருக்குமே, சரி பரவாயில்லை என்று நினைத்துக்கொள்வேன். அந்த படம் பல விருதுகளை வாங்கியிருக்கிறது. அந்த படத்திற்கு பிறகு தான் எனக்கு மெட்ராஸ் படம் அமைந்தது. மெட்ராஸ் படத்தின் மூலம் எனக்கு ஒரு நல்ல அறிமுகம் மக்கள் மத்தியில் கிடைத்தது என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement