இது தான் ஓப்பந்தம்.! முதன் முறையாக போட்டியாளர்களின் சம்பளம் குறித்து ரகசியத்தை உடைத்த சாக்க்ஷி.!

0
10631
sakshi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் மதுமிதா வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மதுமிதா தற்கொலைக்கு முயன்று பிக்பாஸ் விதியை மீறியதால் அவர் வெளியேற்றப்பட்டது அறிவித்திருந்த நிலையில் சம்பள பாக்கியை கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் விஜய் டிவி சார்பாக மதுமிதா மீது புகார் அளித்து இருந்தது.

-விளம்பரம்-
Sakshi

இந்த புகாரை அடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த மதுமிதா, எனக்கு கிடைக்க வேண்டிய சம்பள பாக்கியை தான் கேட்டேன் எனவும், நான் யாருக்கும் கொலை மிரட்டல் விடவில்லை என்றும், இந்த விஷயத்தில் விஜய் டிவியும் கமலும் தலையிட்டு தனக்கு தகுந்த நியாயம் கிடைக்க வழி செய்யுமாறு மதுமிதா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் கொடுக்கும் சம்பளம் பற்றியும் போட்டியாளர்களுக்கு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைப் பற்றி சாக்ஸி தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க : பிக் பாஸில் இருந்து விலகுகிறாரா கமல்.! அடுத்த தொகுப்பாளர் இந்த நடிகரா ?

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறி இருந்த சாக்ஷி சமீபத்தில் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற ஆடை வடிவமைப்பு பேஷன் ஷோவில் கலந்து கொண்டார் இந்த பேஷன் ஷோவில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் மனைவி வடிவமைத்த ஆடையை அணிந்து மாடல் அழகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த பேஷன் ஷோவிற்கு பின்னர் செய்தியாளரிடம் சந்தித்த ஷாக்சி பேசுகையில்,மதுமிதா செய்த செயல் மிகவும் தவறு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் காண்ட்ராக்டில் கையொப்பமிடும் போது நிகழ்ச்சியை விட்டு வெளியேறி 100 நாட்களுக்கு பின்னர்தான் ஊதியம் வழங்கப்படும் என்று தெளிவாக தெரியப்படுத்தி இருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. இதன் மூலம் எனக்கு அதிக ரசிகர்கள் கிடைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement