பிக் பாஸுக்கு முன்பே மூன்று ஆண்டு காதல் – முதன் முறையாக லவ் பிரேக்கப் குறித்து பேசிய சாக்ஷி.

0
1089
sakshi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல்வேறு நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். அதேபோல ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். அந்த லிஸ்டில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பரிட்சயமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை இவர் போட்டியாளர்கள் பற்றி புறம் பேசிகொண்டே இருந்ததால் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டு வந்தார். இருப்பினும் ஒவ்வொரு வாரமாக எப்படியோ எலிமினேஷனிலிருந்து தப்பித்து கொண்டே வந்தார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் கவினுடன் நெருக்கம் காட்டி வந்த சாக்க்ஷி அதன்பின்னர் அவர் லாஸ்லியாவிடம் நெருக்கம் காண்பித்ததால் கொஞ்சம் கவின் மீது கோபம் கொண்டார். இருப்பினும் இப்படி கவின் சாக்க்ஷி லாஸ்லியா ஆகிய மூவரின் முக்கோண காதல் ஒரு சில வாரங்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தது.இறுதியில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து சாக்க்ஷி ஓரம் கட்டி விட்டனர். இதனால் கவின் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார் சாக்க்ஷி. அதே போல புக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போதும், உன்னுடைய உறவு முறிந்து விட்டது என்பதை எண்ணி நான் சந்தோசபடுகிறேன் என்று கவினிடம் கூறிவிட்டு வந்தார் சாக்க்ஷி.

- Advertisement -

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வீடியோ வெளியிட்ட சாக்க்ஷி, பொண்ணுங்கள டிரஸ் மாத்தற மாதிரி கவின் மாத்திட்டு போவியா கவின் என்றும் மோசமாக விமர்சித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாக்ஷி தனது கல்லூரி காலத்தில் தனக்கு நேர்ந்த காதல் முறிவு குறித்து பேசியுள்ளார். அதில், நான் கல்லூரியில் படிக்கும் போது சீனியர் ஒருவரை காதலித்தேன். நான் படித்த கல்லூரியில் ஆண் பெண் பேசக்கூடாது ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால் நாங்கள் ஒன்றாக சாப்பிடும் போது நேரில் பார்த்ததால் தான் உண்டு.

sakshi

அவரும் ஹாஸ்டலில் தங்கி வந்தார். அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் அவருக்கு வந்தது. ஆனால், நான் என்னுடைய சினிமா கனவில் இருந்து வந்தேன். இதனால் எங்களுக்குள் சில பிரச்சனை ஏற்பட்டுவிட்டு பிரிந்துவிட்டேம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement