நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த சாக்க்ஷி அகர்வால்.

0
21979
sakshi-agarwal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு சினிமா துறையில் பல எதிர்பார்க்காத வகையில் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நிலையில் இந்த வருடம் வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் யாருக்கும் அந்த அளவிற்கு எந்த ஒரு பெரிதான படவாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன் பட்டத்தை வென்ற முகென் கூட என்னவானார் என்பதே தெரியவில்லை. அதிலும் பெண்கள் யாரும் படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டிருந்தனர்.

-விளம்பரம்-
View this post on Instagram

?Chillax to the max?

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்க்ஷி அகர்வாளுக்கு தற்போது 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக வந்துகொண்டிருக்கின்றன. மேலும், இவரே பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து சினிமா துறைக்கு செல்லும் முதல் போட்டியாளர் ஆவார். அது மட்டும் இல்லைங்க நடிகை சாக்ஷி அவர்கள் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்திலும், தல அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது 3 படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள் படக்குழுவினர்.

இதையும் பாருங்க : மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த நடிகை என்னவானார். அவரின் தற்போதைய நிலை இதுதான்.

- Advertisement -

நடிக்கும் வாய்ப்பு ஒருபுறம் இருந்தாலும் சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘ ஆக்சன் ‘ படத்திற்கு சாக்ஷி அகர்வால் டப்பிங் செய்தும் இருந்தார். இதுகுறித்து சாக்ஷி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியது, சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆக்சன்’ படத்துக்காக டப்பிங் செய்தது நான் தான். மேலும், டப்பிங் செய்வதில் இது தான் என்னுடைய முதல் அனுபவம். என் குரலை நானே கேட்பதற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு என்றும் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது ஜி.வி. பிரகாஷ் நடித்து வரும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்திலும் சாக்ஸி நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அது மட்டும் இல்லைங்க ராய் லட்சுமி நடித்து வரும் ‘சின்ட்ரெல்லா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சாக்ஷி அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சாக்க்ஷி. இப்படி படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் நடிகை சாக்க்ஷி மற்றொமொரு பக்கத்தில் சமூக வலைத்தளங்களில் தன்னை ஆக்டிவாக வைத்து வருகிறார். சமீபத்தில் இவர், யானை மீது அமர்ந்து போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். இந்த நிலையில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை சாக்க்ஷி தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement