சுக்கிரன் உச்சத்தில் இருக்கும் பிக் பாஸ் 3 நடிகை. அடுத்து ஆர்யாவின் படத்தில்.

0
69774
arya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் சுந்தர்.சியும் ஒருவர். கமர்சியல் படங்கள் ஆகவே திரையுலகில் கொடுத்து வந்த இயக்குநர் சுந்தர் சி அவர்கள் சமீப காலமாகவே பேய் படங்கள் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சுந்தர் சி எழுதி இயக்கி 2014 ஆம் ஆண்டு வெளியான படம் அரண்மனை. இப்படத்தில் சுந்தர் சி, வினய், ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா ஜெரேமியா, ராய் லக்ஷ்மி, சந்தானம், நிதின் சத்யா, கோவை சரளா மற்றும் மனோபாலா ஆகிய பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதையடுத்து சுந்தர் சி அவர்கள் இயக்கத்தில் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அரண்மனை 2 படம் வெளியானது.

-விளம்பரம்-
Image result for aranmanai 3

- Advertisement -

இதில் வைபவ் கவுரவத் தோற்றத்திலும், சுந்தர் சி, சித்தார்த், திரிஷா, ஹன்சிகா மோத்வானி, சூரி, கோவை சரளா மற்றும் மனோபாலா ஆகிய பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். இரண்டாவது பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், சமீப காலமாக சுந்தர் சி இயக்கிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. கடந்த ஆண்டு விஷால், தமன்னா நடிப்பில் வெளிவந்த ஆக்சன் படம் மிகப்பெரிய அளவில் தோல்வியுற்றது. அதனால் சுந்தர்.சி அவர்கள் மீண்டும் கமர்ஷியல், காமெடி,போய் படம் எடுப்பதில் முடிவெடுப்பதாக தெரியவந்துள்ளது.

இதையும் பாருங்க : நான் சோகமானால் கார்ல அவரோட சிடி இருக்கும் அத போட்டு பாப்பேன் – விஜய் சொன்ன சீக்ரட்.

-விளம்பரம்-

இந்நிலையில் சுந்தர் சி அவர்கள் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அரண்மனை 3 படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விவேக், யோகி பாபு உட்பட பலர் நடிக்க உள்ளனர் என்று படக்குழுத் தெரிவித்திருந்தது. பொதுவாகவே சுந்தர் சி இயக்கும் பேய் படத்தில் மூன்று கதாநாயகிகள் இருப்பார்கள். அந்த வகையில் இரண்டாவது கதாநாயகியாக பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

sakshi

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு தான் சாக்‌ஷி பிரபலமாகியுள்ளார். தமிழில் சில படங்களில் நடித்துள்ள சாக்‌ஷி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்ட்ரெல்லா, டெடி படங்களில் நடித்து வருகிறார். ஆர்யா நடிப்பில் வரவிருக்கும் டெடி படத்தில் சாக்ஷி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் முதல் பாகத்தில் நடித்த ஆண்ட்ரியாவும் இந்த படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அதிகபடியான படங்களில் கமிட் ஆகி இருப்பது சாக்க்ஷி தான். ஆனால், சாக்க்ஷியிடம் ஆரம்பத்தில் நெருக்கமாக இருந்து பின்னர் அவருக்கு ஆகாதவரான போன கவின் இன்னும் எந்த படத்தின் அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதே போல லாஸ்லியாவிற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் பாதியிலேயே வந்தார். ஆனால், லாஸ்லியாவும் கவினை மறந்து விட்டார் என்று கவின் ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பில் தான் இருந்து வருகிறார்கள்.

Advertisement