தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பிகில் படத்தை தொடர்ந்து இளைய தளபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் படம் “மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ ப்ரேம்,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். சமீபத்தில் தான் மாஸ்டர் படத்தின் பாடல் ஒன்று ஒரு குட்டி கதை என்ற டைட்டில் உடன் வெளியாகியது. வழக்கம் போல் தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் ஓப்பனிங் பாடலை பாடியிருக்கிறார். தற்போது இந்த குட்டி கதை பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், மாஸ்டர் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் பாருங்க : ஷாலினியுடன் வெளியில் வந்த ஆத்விக். லேட்டஸ்ட் புகைப்படத்தை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்.
இந்நிலையில் தளபதி விஜய்யின் 20 வருட சினிமா பயணம் குறித்து பிரபல சேனல் ஒன்று விஜய்யை நேர்காணல் எடுத்து. அதில் பல பிரபலங்கள் விஜய்யிடம் பல கேள்விகள் கேட்டிருந்தார்கள். அப்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி அவர்களும் ஒரு கேள்வி கேட்டிருந்தார். ஜெயம் ரவி அவர்கள் கேட்டது, சினிமா துறையில் 20 வருடங்கள் இருப்பது பெரிய விஷயம். அதுவும் 20 வருஷம் சினிமா துறையில் இருக்கிறோம் என்று இருக்காமல் 19 ஆண்டுகளாக உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டே இருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். படத்தில் நீங்கள் எப்படி காமெடி பண்றீங்க? ஆக்சன், நடனம்,சீன் எதாவதாக இருந்தாலும் காமெடியோட பண்றீங்க.
அது எப்படி நீங்க பண்றீங்க? அது நீங்களா யோசித்து பண்ணறதா? இல்ல வேற யாராவது சொன்னதா? அது பற்றி சொல்லுங்கள் என்று கூறியிருந்தார். அதற்கு விஜய் கூறியது, நான் கவுண்டமணி –செந்தில் அவர்களின் ரசிகன். இப்பவும் என்னுடைய காரில் அவர்களுடைய நகைச்சுவை காட்சி சிடி வைத்திருக்கிறேன். மனது கஷ்டமாக இருந்தாலும், நான் டவுனாக இருக்கும் போது அவர்கள் வீடியோ பார்ப்பேன். அப்போது நம்மை அறியாமலேயே ஒரு சிரிப்பு வரும். எனக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் அவருடைய ஸ்லாங் அப்படியே ஊறி போயிருக்கு. அவர்கள் தான் எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்காங்க. அதெல்லாம் வைத்து தான் நான் செய்தேன் என்று கூறினார். விஜய்யும்,கவுண்டமணியும் இணைந்து ரசிகன், கோயம்புத்தூர் மாப்பிளை போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்கள்.