வனிதா என்ன 2வது படிக்கற கொழந்தையா ? வனிதா திருமணம் குறித்து பேசிய முதல் பிக் பாஸ் நடிகை.

0
41685
vanitha
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திதான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. வனிதாவுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்ட நிலையில் தற்போது ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெறாமல் இருக்கும் பீட்டர் பவுல் என்பவரை வனிதா மூன்றாம் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தால் வணிதாவிற்கு சமூகவலைதளத்தில் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கெல்லாம் உடனுக்குடன் பதில் அளித்து வருகிறார் வனிதா.

-விளம்பரம்-

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாக்ஷி, வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் பிக்பாஸ் பற்றிய கதைகளை நான் மூடிவிட்டேன். இருப்பினும் வனிதாவை பற்றி எனக்கு தெரியும். அவர் அனைத்திலும் தெளிவான முடிவை எடுப்பவர். இதுவனிதாவுடைய மிகவும் தனிப்பட்ட விஷயம். அதே போல வனிதாவின் கணவர் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. மேலும் பீட்டர் பவுலிடம் வனிதா ஏமாந்து விட்டார்கள் என்று ரசிகர்கள் கூறும் கருத்திற்கு பதிலளித்த சாக்ஸி,

- Advertisement -

வனிதா ஒன்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் சின்ன பொண்ணு கிடையாது. அவர்களை பற்றி ரசிகர்கள் முகநூலிலும் சமூக வலைதளத்திலும் எழுதுவதை நிறுத்திவிட்டால் இந்த பிரச்சனை முடிந்துவிடும் என்று நான் நினைக்கிறேன். வனிதா பல்வேறு விஷயங்களை தாண்டித்தான் வந்திருக்கிறார். அவருக்கு தான் என்ன செய்கிறோம் என்பது தெரியும். எனவே, அவங்களுக்கு எல்லாம் தெரிந்துதான் இது அனைத்தும் நடந்திருக்கும். மேலும் இந்த பிரச்சினை எல்லாம் எப்படி அவர் கடந்து வருவார் என்பது தெரியவில்லை.

ஏனென்றால் என்னுடைய வாழ்க்கையிலேயே ஆயிரம் பிரச்சனை இருக்கிறது என்று கூறியுள்ளார் சாக்ஷி. சாக்ஷியின் இந்த பேட்டியை கண்டுள்ள வனிதா, தனது சமூக வலைதளத்தில் சாக்ஷிக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஏற்கனவே வனிதாவின் திருமணம் பற்றி அறிவுரை கூறிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனையும், பிரபல நடிகை குட்டி பத்மினியையும் வனிதா கடுமையாக திட்டியதால் அவர்கள் இவருவருமே கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement