பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை கடந்துள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். வாரத்தின் முதல் நாள் என்பதால் கடந்த திங்கள் கிழமை இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது.
இந்த வார நாமினேஷன்படி அபிராமி, சாக்க்ஷி சரவணன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்ற சரவணன் திடீரென்று வெளியேற்றப்பட்டார். எனவே, இந்த எலிமினேஷன் மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
தற்போது நடைபெற்று வரும் ஓட்டிங்கில் லாஸ்லியாவிற்கு தான் அதிகப்படியான ஓட்டுக்கள் விழுந்து வருகிறது. மேலும், இந்த வாரம் தொடங்கியதிலிருந்தே சாக்க்ஷிக்கு தான் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும், நமது வலைதளத்தில் நடத்தப்பட்டு வரும் வாக்கெடுப்புகளிலும் சாக்க்ஷிக்கு தான் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது.
கடந்த வாரம் சாக்க்ஷி வெளியேற்றப்பட்டு ரகசிய அறையில் வைக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம நிகழ்ச்சியில் ரேஷ்மா வெளியேறுது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. எனவே, இந்த வாரம் சாக்க்ஷி தான் வெளியயேற்ற படுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும், அவர் ரகசிய அறையில் வைக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.