என் முன்னாடியே இப்படியெல்லாம் பண்ணாங்க.! கவின்-லாஸ்லியா குறித்து பேசிய சாக்க்ஷி.!

0
11563
sakshi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சாக்க்ஷி கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை இவர் போட்டியாளர்கள் பற்றி புறம் பேசிகொண்டே இருந்ததால் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டு வந்தார். இருப்பினும் ஒவ்வொரு வாரமாக எப்படியோ எலிமினேஷனிலிருந்து தப்பித்து கொண்டே வந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இவர் வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் கவினுடன் நெருக்கம் காட்டி வந்த சாக்க்ஷி அதன்பின்னர் அவர் லாஸ்லியாவிடம் நெருக்கம் காண்பித்ததால் கொஞ்சம் கவின் மீது கோபம் கொண்டார். இருப்பினும் இப்படி கவின் சாக்க்ஷி லாஸ்லியா ஆகிய மூவரின் முக்கோண காதல் ஒரு சில வாரங்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தது. இறுதியில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து சாட்சியை ஓரம் கட்டி விட்டனர்.

இதையும் பாருங்க : நெருங்கும் இறுதி நாள் ஓட்டிங்.! சந்தேகமே இல்லாமல் வெளியேற போவது இவர் தான்.! 

- Advertisement -

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக லாஸ்லியாவிடம் சண்டை முற்றி பேசாமல் இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முதன் முறையாக பேட்டியளித்துள்ள சாக்க்ஷியிடம் கவின் மற்றும் லாஸ்லியா காதலிக்கின்றனரா என்று கேள்வி கேட்கப்பட்டது.

Related image

அப்போது பேசிய சாக்க்ஷி, நான் லாஸ்லியாவிடம் கவின் குறித்து கேட்ட போது நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று தான் கூறினால். அதே போல கவினிடம் கேட்ட போது நான் லாஸ்லியாவிடம் நண்பனாக தான் பழகுகிறேன் நீ தான் மச்சா எனக்கு முக்கியம் என்று தான் என்னிடமும் சொன்னார். ஆனால், என் முன்னாடியே அவங்க ரெண்டு பேரும் நெறய விஷயம் செய்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், கடைசி வரை அவர்கள் இருவருக்கும் உள்ள உறவை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மேலும், லாஸ்லியா குறித்து பேசிய சாக்க்ஷி, அவருடைய உண்மையான முகம் எதுவென்று என்னால் இதுவரை கணிக்க முடியவில்லை. வனிதா சமீபத்தில் சொன்னது போல அவருக்கு 10 முகம் இருக்கிறது. எந்த முகம் உண்மையான முகம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement