எல்லாத்தையும் தாண்டி Trpகாக தான் எல்லாத்தையும் பண்றாங்க – பிக் பாஸ் குறித்து புட்டு புட்டு வைத்த சீசன் 3 போட்டியாளர்.

0
340
Biggboss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இதுவரை 4 சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இதுவரை பிக் பாஸ் சீசனில் பல சர்ச்சையான விஷயங்கள் நடைபெற்று இருக்கிறது. முதல் சீசனில் ஓவியாவின் தற்கொலை முயற்சி முதல் கடைசி சீசனில் நமீதா மாரிமுத்துவின் வெளியேற்றம் வரை பல சர்ச்சையான விஷயங்களுக்கு விடை தெரியாமல் தான் இருந்து வருகிறது.

-விளம்பரம்-

என்னதான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ரசிகர் பட்டாளம் இருந்தாலும். பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு Scripted நிகழ்ச்சி என்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் கூறி இருக்கின்றனர். மேலும், ஓவியா கூட கடந்த 2020 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்த ஓவியா ‘பிக் பஸ் நிகழ்ச்சியை தடை செய்தால் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? இல்லை ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் ? என்று கேட்டு இருந்தார்.

- Advertisement -

இதற்கு ரசிகர் ஒருவர் தடை செய்ய வேண்டும் என்று பதிலளித்திருந்தார் .அதற்கு பதில் தெரிவித்த ஓவியா பிக்பாஸில் டிஆர்பி காக போட்டியாளர்களை தற்கொலை செய்யும் அளவிற்கு டார்ச்சர் செய்யக்கூடாது என்று ஓவியா கூறி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு Scripted நிகழ்ச்சி தான் என்பது போல பிக் பாஸ் 3 போட்டியாளர் ஷாக்சி கூறி இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 5 சீசன்களை கடந்து வந்தாலும் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த சீசனில் அதிகம் பேசப்பட்டு வந்த விஷயம் என்னவென்றால் கவினின் காதல் கதைதான். லாஸ்லியாவிற்கு முன்னதாக கவின் மற்றும் சாக்ஸியின் காதல் கதைதான் வைரலாக பேசப்பட்டு வந்தது. அதன் பின்னர் கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு பிரிவு ஏற்பட்டு விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சாக்ஷி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமும் அடைந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாக்ஷி, பிக் பாஸ் என்பதே லாக்டவுன் தான், அந்த லாக் டவுனை கடந்து வந்தால் இதை கடந்து சென்று விடலாம். பிக் பாஸ் வீட்டிற்குள் போன் இல்லாமலும் வெளியேறுவதற்கு தொடர்பு இல்லாமல் இருந்தது மிகப்பெரிய ஒரு அனுபவமாக இருந்தது. அந்த நிகழ்ச்சி மூலம் நான் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டேன். வாழ்க்கை ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் நான் பிக் பாஸ் வீட்டில் பலவற்றை கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார் சாக்ஷி.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு Scripted நிகழ்ச்சியா என்று தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சாக்ஷி ‘ஒருவேளை அது ஸ்கிரிப்ட் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் தவறு ஒன்றும் கிடையாது. எல்லாத்திற்கும் மேலாக Viewers தானே முக்கியம். அதற்கு தானே ஒரு நிகழ்ச்சி செய்கிறோம். அதை மக்களும் என்ஜாய் செய்கிறார்கள். ஒரு சில மக்களுக்கு பிடிக்காது ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இந்த நிகழ்ச்சி பிடித்திருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

Advertisement