உங்கள பிக் பாஸ்ல நான் பாக்கவே இல்லையே – கேலி செய்த ரசிகருக்கு பிக் பாஸ் நடிகை கொடுத்த பதில்.

0
1304
sakshi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சீசன் 3 நிகழ்ச்சி தான் மற்ற ரெண்டு சீசன்களை விட பட்டையைக் கிளப்பியது என்று கூட சொல்லலாம். மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மத்த ரெண்டு சீசன்களை விட காதல், கலவரங்கள், சண்டைகளுக்கு பஞ்சமேஇல்லாமல் இருந்தது. அந்த அளவிற்கு வேற லெவல்ல போயிருந்தது. இந்த சீசனில் ரசிங்கர்களுக்கு பரிட்சியமில்லாத பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் சாக்க்ஷி அகர்வாலும் ஒருவர். நடிகை சாக்ஷி அவர்கள் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்திலும், தல அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது 3 படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியானது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை சாக்ஷி ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்தார். ஆனால், இடையில் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. அதன் பின்னர் கவினை பற்றி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறி வந்தார் சாக்ஷி. இதனாலேயே இவரை கவின் ரசிகர்கள் டார்கட் செய்து கலாய்த்தும் வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை சாக்ஷி, காலா படத்தில் நடித்த சில காட்சியின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர், இதுவரை இவர் ஒரு நடிகை என்பது எனக்கு தெரியாது. இவரை பிக்பாஸ் மூலமாக ஒரு மாடல் என்று தான் எனக்கு தெரியும் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு மற்றொரு ரசிகர் என்னது இவர் பிக்பாஸில் கலந்து கொண்டாரா? அதுவே எனக்கு தெரியாது என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள சாக்ஸி உங்களுக்கு ஏதோ தீவிர பிரச்சினை இருக்கிறது. இருப்பினும் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்க்காமல் என்னை நீங்கள் பின்தொடர்வதை நினைத்து சந்தோஷப் படுகிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement