பிக் பாஸ் போட்டியாளர்களில் இவர் ஒருத்தர் கிட்ட மட்டும் தான் பேசி வருகிறேன் – சாக்ஷி பேட்டி.

0
10769
sakshi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த சீசனில் அதிகம் பேசப்பட்டு வந்த விஷயம் என்னவென்றால் கவினின் காதல் கதைதான். லாஸ்லியாவிற்கு முன்னதாக கவின் மற்றும் சாக்ஸியின் காதல் கதைதான் வைரலாக பேசப்பட்டு வந்தது. அதன் பின்னர் கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு பிரிவு ஏற்பட்டு விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சாக்ஷி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமும் அடைந்தார்.

-விளம்பரம்-
சேரனுடன் மட்டுமே பேசிவருகிறேன் : நடிகை சாக்ஷி அகர்வால்!

சேரனுடன் மட்டுமே பேசிவருகிறேன் : நடிகை சாக்ஷி அகர்வால்!YouTube Subscribe Link ➤ https://bit.ly/34EmUE5#Corona | #COVID19 | #Lockdown | #Cheran | #SakshiAgarwal | #Cinema | #BiggBoss

News7Tamil ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಭಾನುವಾರ, ಜುಲೈ 5, 2020

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாக்ஷி, பிக் பாஸ் என்பதே லாக்டவுன் தான், அந்த லாக் டவுனை கடந்து வந்தால் இதை கடந்து சென்று விடலாம். பிக் பாஸ் வீட்டிற்குள் போன் இல்லாமலும் வெளியேறுவதற்கு தொடர்பு இல்லாமல் இருந்தது மிகப்பெரிய ஒரு அனுபவமாக இருந்தது. அந்த நிகழ்ச்சி மூலம் நான் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டேன். வாழ்க்கை ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் நான் பிக் பாஸ் வீட்டில் பலவற்றை கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார் சாக்ஷி.

- Advertisement -

மேலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி கேள்வி கேட்கப் பட்டதற்கு பிக்பாஸ் வீட்டில் எனக்கு போட்டியாளர்களை பற்றிய எண்ணம் இருந்ததோ, அதே எண்ணம்தான் தற்போதும் இருக்கிறது. சொல்லப்போனால் நான் யாருடனும் பெரிதாக தொடர்பில் இல்லை. பிக் பாஸ் வீட்டில் நடந்ததை நான் அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களில் சேரனுடன் மட்டும்தான் பேசிக் கொண்டு வருகிறேன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அவருடன் எனக்கு பெரிய தொடர்பு இல்லை ஆனால், வெளியில் வந்த பிறகு அவருடன் மட்டும் தான் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சாக்ஷி .

சாக்ஷி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஆரம்பத்தில் இவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தது அபிராமி தான். ஆனால், சாக்ஷிகும் கவினுக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது அபிராமி லாஸ்லியாவின் பக்கம் திரும்பி விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் அபிராமி மற்றும் லாஸ்லியா நல்ல தோழிகளாக இருந்து வருகிறார்கள். ஆனால், பிக் பாஸ் வீட்டில் மச்சி மச்சி என்று சாக்ஸி இடம் உறவு கொண்டாடிய அபிராமி கூட தற்போது சாக்ஷியிடம் பேசுவது இல்லை என்பதுதான் மிகுந்த ஆச்சரியமான ஒரு விஷயம்.

-விளம்பரம்-
Advertisement