என்கூட கார்ல வராத பின்னாடி வா. நடிகர் சக்தியிடம் இப்படி சொன்னது யார் தெரியுமா?

0
74215
sakthi

தென்னிந்திய சினிமா உலகில் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பி.வாசு. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், திரைப்பட கதாசிரியர் என பன்முகங்களை நடிகர், இவருடைய திரைப்படங்கள் எல்லாமே வணிக ரீதியாக வெற்றி அடைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கத்தில் வந்த சின்னத்தம்பி, மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி போன்று பல பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்தவர். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களையும் இயக்கி உள்ளார். வாசுவின் அப்பா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான எம்ஜிஆர் மட்டும் என்.டி.ஆர். ஆகியோருக்கு மேக்கப் மேனாக பல வருடங்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for sakthi p vasu

முதலில் பி.வாசு, இயக்குனர் சி.வி.ஸ்ரீதர் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தார். அதற்கு பிறகு பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். 90 கால கட்டங்களில் இவருடைய படங்கள் தான் அதிகம் ஹிட் கொடுக்கும். பிரபுவை வைத்து இவர் இயக்கிய சின்னதம்பி படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்திற்காக நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டினார்கள். இன்று வரை இந்த படம் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்து வருகிறது.

- Advertisement -

இதை அடுத்து பி.வாசு அவர்கள் ரஜினியை வைத்து இயக்கிய மன்னன் திரைப்படமும் மெகா ஹிட்டாக அமைந்தது. அதற்கு பிறகு ரஜினியை வைத்து எடுத்த படம் சந்திரமுகி. இந்த படம் பல நாட்கள் ஓடி மக்கள் மத்தியில் பிரபலமானது. அது மட்டும் இல்லாமல் பி.வாசு அவர்களின் படங்கள் எல்லாமே கமர்சியல் படமாக தான் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் இவருடைய படங்களை அதிகம் விரும்புகிறார்கள். வாசுவின் மகன் ஷக்தி அவர்கள் தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

வீடியோவில் 7:30 நிமிடத்தில் பார்க்கவும்

இதன் பின் பல படங்கள் நடித்து உள்ளார். ஆனால், சக்திக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் சொல்லி கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் இடம் பிடித்தார். இந்நிலையில் இயக்குனர் பி.வாசு அவர்கள் தன்னுடைய மகனான சக்தியை நீ ஒரு நடிகனாக காரில் ஏற வேண்டாம் என்று கட்டளையிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பி வாசு அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியது, என் மகனை வைத்து படம் இயக்கும் போது நீ ஒரு நடிகனாக என் காரில் நான் ஏற வேண்டாம் என்று அவனிடம் கூறினேன். அதோடு என் மகனிடம் துணை இயக்குனர்கள் உடன் வா என்று கூறுவேன். ஏன்னா,அப்போது தான் அவன் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளுவான் மற்றும் பல விஷயங்களை என் மகனால் தெரிந்து கொள்ள முடியும் என்று தான் நான் அப்படி கூறினேன்.

Advertisement