விஜய் டிவியின் பிரபல சீரியலில் சம்யுக்தா மற்றும் சோம் சேகர் – வெளியான ப்ரோமோ.

0
1301
som
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீசனில் பாலாஜி, சம்யுக்தா, சோம் சேகர் என்று ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அதில் சோம் சேகர் கடந்த 2010ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அதே போல இவர் பா பாண்டி, வேலையில்லா பட்டதாரி 2, சூரரை போற்று போன்ற படங்களில் கூட சைட் ஆர்ட்டிஸ்ட்டாக தலைகாட்பித்துள்ளார்.

- Advertisement -

அதே போல மற்றொரு புதிய முகமாக இந்த சீசனில் அறிமுகமான சம்யுக்தா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சந்திரகுமாரி’ தொடரில் நடித்து இருக்கிறார். பொதுவாக பிக் பாஸ் போட்டியாளர்களை விஜய் டிவி கைவிடுவது இல்லை. சீசன் முடிந்தாலும் பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து பல நிகழ்ச்சிகளை நடத்திவிடுவார்கள். அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் பிக் பாஸ் பிரபலங்கள் விசிட் அடித்துள்ளனர்.

விஜய் தொடலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக சீரியல் சங்கமம் என்ற பெயரில் இரண்டு சீரியல்களையும் ஒன்றாக இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி டீம் இனைந்து இருக்கிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள ப்ரோமோவில் இந்த சீரியலில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பிக் பாஸ் 4 பிரபலங்கள் ரியோ, சம்யுக்தா, சோம் ஆகியோர் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement