‘கலீஜ்’னா கேட்ட வார்த்தையா ? அப்படினா அவ எல்லாம் ‘F***’னு பேசி இருக்கா – சம்யுக்தா பேட்டி.

0
3007
samyuktha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 60வது நாட்களை கடந்து கிட்டத்தட்ட பாதி சீசனை நிறைவு செய்திருக்கிறது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி என்று நான்கு பேர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் ஞாயிற்று கிழமை நிகழ்ச்சியில் ஐந்தாவது போட்டியாளராக சம்யுக்தா வெளியேறி இருந்தார். இதுவரை வெளியேறிய 4 பேரை விட சம்யுகதாவின் வெளியேற்றம் தான் அவருக்கு மிகப் பெரியஏமாற்றமாக இருந்திருக்கும் என்பது மறுக்க முடியாது ஒன்று.

வீடியோவில் 10 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இதற்கு முக்கிய காரணமே கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அனிதா இடம் பெற்று இருந்தார். ஆனால் கடந்த வாரம் பிக்பாஸ் Nomination Topple card என்ற புதிய பவர் ஒன்றை பிக்பாஸ் அறிமுகம் செய்து வைத்தார். இதனைமிகவும் தந்திரமாக வென்ற அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்திருந்தார். ஒருவேளை இந்தப் பவரைபிக் பாஸ் கடந்த வாரம் அறிமுகம் செய்யப் படாமல் இருந்திருந்தால் சம்யுக்தாவிற்கு பதிலாக அனிதாதான் வெளியேறி இருப்பார் என்பது பலரின் நம்பிக்கை.

- Advertisement -

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து கமலிடம் சொன்ன சம்யுக்தா, நான் வெளியேறுவது மிகவும் கலவையான உணர்வு, நான் இப்படி Nomination Topple Card மூலம் நாமினேஷனில் இடம் பெற்று வெளியேறுவது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்று கூறியிருந்தார் சம்யுக்தா. அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கால் சென்டர் டாஸ்கில் சனம் ஷெட்டி, சம்யுக்தா கால் செய்த போது ‘கலீஜ்’ என்ற வார்த்தையை உபயோகம் செய்து இருந்தார். அது அப்போதும் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.

வீடியோவில் 47 : 20 நிமிடத்தில் பார்க்கவும்

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் இதற்கான விளக்கத்தை அளித்துள்ள சம்யுக்தா, அவங்கவங்க எவ்ளோ வார்த்தை விட்டிருக்காங்க சண்டைல, சனம் எல்லாம் சண்டைல ‘F**’ வார்த்தையே பயன்படுத்துவா, அதே பெரிய விஷயம் ஆகல. ஆனால், என்னை சீண்டிவிட்டதால் நான் பேசிய வார்த்தையை இப்படி ஒரு பெரிய விஷயமாக ஆக்கிவிட்டார்கள். சனம் ஒரு வார்த்தையை எடுத்தால் அப்புறம் வந்து தூண்டிவிடும் பழக்கம் இருக்கிறது. அந்த ‘கலீஜ்’ வார்த்தை கூட அப்படித்தான் வந்தது. கருத்தவெல்லாம் கலிஜா பாடலை நீங்கள் பாடியது கிடையாதா ? எல்லாரும் பாடிய பாட்டு தானே. அப்போது பாடும்போது தப்பாக தெரிஞ்சுதா என்ன ? கலீஜ் என்பது கேட்ட வார்த்தையா என்ன ? அதுபோலத்தான் சென்னையில் இருப்பவர்கள் அது சாதாரணமாக பயன்படுத்தும் ஒரு வார்த்தை அதற்கு ஆழமான அர்த்தம் ஒன்றும் கிடையாது போற போக்கில் நான் சொன்ன விஷயம் ஆனால் அதை அவர் அவ்வளவு பெரிதாக ஆகிவிட்டார்.

-விளம்பரம்-
Advertisement