வெளியேறிய அதிதி ராவ் – டாப் நடிகரின் படத்தில் கமிட் ஆன சம்யுக்தா. யார் படத்தில் தெரியுமா ?

0
2336
sam
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றாலே பட வாய்ப்புகள் கண்டிப்பாக வந்துவிடும் என்ற எண்ணத்தில் தான் பல பிரபலங்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அதில் ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமைந்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவிற்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத பல்வேறு புதுமுகங்கள் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்கள் அந்த வகையில் சம்யுக்தாவும் ஒருவர்.

-விளம்பரம்-

மாடல் அழகியான இவர் சூப்பர் மாம் என்ற பட்டத்தையும் பெற்று இருக்கிறார் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில நாட்களில் மிகவும் அமைதியானவர் போலத்தான் இருந்து வந்தார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இவர் பாலாஜியுடன் இணைந்து செய்த சில மோசமான செயல்களால் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டு இருந்தார். அதிலும் ஆரியை வளர்ப்பு சரியில்லை என்று சொன்னது சனம் ஷெட்டியை கலீஜ் என்று சொன்னது போன்ற வார்த்தைகளால் இவர் பெரும் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஒரு சில தினங்களிலேயே இவருக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் என்ற படத்தில்தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். எனவே, பிக்பாஸ் போட்டியாளராக இவரை கண்ட பலரும் விரைவில் ஒரு நடிகையாக இருக்கலாம்.ஆனால், ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி என்ற தொடரில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் துக்ளக் தர்பார். சமீபத்தில் தான் துக்ளக் தர்பார் படத்தில் இருந்து அதிதி ராவ் திடீரென்று விலகி விட்டார் . கொரோனா லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட கால்ஷீட் பிரச்னையால் அவர் விலகியதாகக் அதிதி ராவ், லாக்டவுனுக்கு முன் ஒரு சில படங்களுக்கு கால் ஷீட் கொடுத்துள்ளார். ஆனால், லாக்டவுன் பிரச்சனை காரணமாக நின்று போன பல படத்தின் படபிடிப்புகள் தற்போது துவங்கியுள்ளதால் படதிற்கு கால் ஷீட்டில் பிரச்சனை ஏற்பட்டதால் துக்ளக் படத்தில் இருந்து விலகிவிட்டாராம் நடிகை அததி ராவ், தற்போது இவருக்கு பதிலாக நடிகை ரஷி கண்ணா இந்த படத்தில் இணைந்துள்ளாராம். நடிகை ரஷி கண்ணா ஏற்கனவே சங்கத் தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement