ஆரி அப்படி சொன்னது தப்பு தான் – குறும்படம் போட்டும் சமரசம் ஆகாத சம்யுக்தா. வீடியோ இதோ.

0
4440
sam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 59 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறி இருந்தார் மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதைவிட சம்யுக்தாவின் வெளியேற்றம் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணமே இவர் வெளியேறுவதற்கு முன்பாக இவருக்கு குறும்படம் போடப்பட்டு இருந்தது. அதே மற்ற போட்டியாளர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்ட விதத்தை விட சம்யுக்தாவை மற்ற போட்டியாளர்கள் வழியனுப்பி வைத்த விதம் மிகவும் நன்றாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

இதுவரை வெளியேறிய 4 பேரை விட சம்யுகதாவின் வெளியேற்றம் தான் அவருக்கு மிகப் பெரியஏமாற்றமாக இருந்திருக்கும் என்பது மறுக்க முடியாது ஒன்று.இதற்கு முக்கிய காரணமே கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அனிதா இடம் பெற்று இருந்தார். ஆனால் கடந்த வாரம் பிக்பாஸ் Nomination Topple card என்ற புதிய பவர் ஒன்றை பிக்பாஸ் அறிமுகம் செய்து வைத்தார். இதனைமிகவும் தந்திரமாக வென்ற அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்திருந்தார்.

- Advertisement -

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து கமலிடம் சொன்ன சம்யுக்தா, நான் வெளியேறுவது மிகவும் கலவையான உணர்வு, நான் இப்படி Nomination Topple Card மூலம் நாமினேஷனில் இடம் பெற்று வெளியேறுவது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. சம்யுக்தா வெளியேறிய போது, ஆரி, சமுயுக்தாவின் தாய்மையை குறித்து பேசினாரா இல்லையா என்பதற்கான குறும்படம் ஒன்று போடப்பட்டது. ஆனால்,அதில் ஆரி, சம்யுக்தாவின் maturity பற்றி தான் குறிப்பிட்டாரே தவிர தாய்மையை பற்றி குறிப்பிடவில்லை என்று கமல் கூறினார்.

வீடியோவில் 40 : 45 நிமிடத்தில் பார்க்கவும்

இருப்பினும் சம்யுக்தா ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சம்யுக்தா இதுகுறித்து பேசுகையில் ‘கமல் சொன்னதுக்கு அப்புறம் கூட நான் சமாதானம் ஆகல, எல்லா அம்மாக்களும் mature ஆக இருக்க வேண்டும் என்ற ஒரு அளவுகோல் கிடையாது. Immature அம்மா கூட இருக்காங்க. தாய் ஒரு தாய் தான் எப்போதும்’ என்று கூறிய சம்யுக்தா, ஆரியிடம் எனக்கு பெருசா எதுவும் கிடையாது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement