பிக் பாஸில் இருந்து வந்த சம்யுக்தாவை கேக் வெட்டி வரவேற்ற மகன் – வைரல் வீடியோ.

0
2703
samyuktha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 56 நாட்களை கடந்து கிட்டத்தட்ட பாதி சீசனை நிறைவு செய்திருக்கிறது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி என்று நான்கு பேர் வெளியேறிய நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஐந்தாவது போட்டியாளராக சம்யுக்தா வெளியேறி இருந்தார் இதுவரை வெளியேறிய 4 பேரை விட சம்யுகதாவின் வெளியேற்றம் தான் அவருக்கு மிகப் பெரியஏமாற்றமாக இருந்திருக்கும் என்பது மறுக்க முடியாது ஒன்று.

-விளம்பரம்-

இதற்கு முக்கிய காரணமே கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அனிதா இடம் பெற்று இருந்தார். ஆனால் கடந்த வாரம் பிக்பாஸ் Nomination Topple card என்ற புதிய பவர் ஒன்றை பிக்பாஸ் அறிமுகம் செய்து வைத்தார். இதனைமிகவும் தந்திரமாக வென்ற அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்திருந்தார். ஒருவேளை இந்தப் பவரைபிக் பாஸ் கடந்த வாரம் அறிமுகம் செய்யப் படாமல் இருந்திருந்தால் சம்யுக்தாவிற்கு பதிலாக அனிதாதான் வெளியேறி இருப்பார் என்பது பலரின் நம்பிக்கை.

- Advertisement -

அதேபோல கடந்த வாரம் நாமினேஷன் இல் இடம்பெற்ற சோம் சேகர் ஜித்தன் ரமேஷ் நிஷா ஆகியவர்களுக்கு கூட மிகவும் கடுமையான போட்டி நிலவியது. நேற்றைய நிகழ்ச்சியில் இதை தெரிவித்த கமல் சம்யுக்தாவிற்கு முன்னதாக வந்த போட்டியாளர்களை விட ஒரு சில ஆயிரம் வாக்குகளைத் தான் அதிகமாக பெற்றார் என்று கூறியிருந்தார். அதேபோல சமந்தாவிற்கு 4 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாகவும் கூறி இருந்தார் கமல்.

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து கமலிடம் சொன்ன சம்யுக்தா, நான் வெளியேறுவது மிகவும் கலவையான உணர்வு, நான் இப்படி Nomination Topple Card மூலம் நாமினேஷனில் இடம் பெற்று வெளியேறுவது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. ஆனால், என்னுடைய மகனை பார்க்கப்போகிறேன் என்பது மகழ்ச்சி என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி வரவேற்றனர்.

-விளம்பரம்-
Advertisement