எனக்கும் பாவனாவிற்கும் என்ன உறவு முறை. லைவ் சாட்டில் கூறிய சம்யுக்தா. வீடியோ இதோ.

0
31518
sam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 61வது நாட்களை கடந்து கிட்டத்தட்ட பாதி சீசனை நிறைவு செய்திருக்கிறது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி என்று நான்கு பேர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் ஞாயிற்று கிழமை நிகழ்ச்சியில் ஐந்தாவது போட்டியாளராக சம்யுக்தா வெளியேறி இருந்தார். இதுவரை வெளியேறிய 4 பேரை விட சம்யுகதாவின் வெளியேற்றம் தான் அவருக்கு மிகப் பெரியஏமாற்றமாக இருந்திருக்கும் என்பது மறுக்க முடியாது ஒன்று.

-விளம்பரம்-

இதற்கு முக்கிய காரணமே கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அனிதா இடம் பெற்று இருந்தார். ஆனால் கடந்த வாரம் பிக்பாஸ் Nomination Topple card என்ற புதிய பவர் ஒன்றை பிக்பாஸ் அறிமுகம் செய்து வைத்தார். இதனைமிகவும் தந்திரமாக வென்ற அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்திருந்தார். ஒருவேளை இந்தப் பவரைபிக் பாஸ் கடந்த வாரம் அறிமுகம் செய்யப் படாமல் இருந்திருந்தால் சம்யுக்தாவிற்கு பதிலாக அனிதாதான் வெளியேறி இருப்பார் என்பது பலரின் நம்பிக்கை.

- Advertisement -

சம்யுக்தா, பிரபல விஜய்டிவி தொகுப்பாளினியாக பாவனாவிற்கு மிகவும் நெருக்கமானார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. இவரும் சம்யுக்தாவும் இணைந்து நடனமாடி பல வீடியோகளை போட்டுள்ளார்கள்.ஆனால், சம்யுக்தா இது நாள் வரை, தனக்கு பாவனாவை தெரியும் என்று எங்கேயும் சொன்னதும் கிடையாது. சம்யுக்தா கடந்த வாரம் நாமினேஷனில் வந்த போது கூட பாவனா, சம்யுக்தாவிற்கு வாக்களிக்குமாறு ட்வீட் செய்து இருந்தார். பலரும் பாவனா, சம்யுக்தாவின் சகோதரி என்று கூட கூறி வருகின்றனர்.

வீடியோவில் 11:44 நிமிடத்தில் பார்க்கவும்

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் லைவ் வீடியோவில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்த சம்யுக்தா, பாவனா குறித்து கூறுகையில் ‘பாவனா என்னுடைய சகோதரி கிடையாது அவர் என்னுடைய ஸ்கூல் சீனியர் மேலும் நாங்கள் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். மும்பையில் இருக்கும் பாவனாவின் உறவினர்கள் தற்போது கொரோனா பிரச்சினை காரணமாக என்னுடைய வீட்டில் தான் தங்கி வருகிறார்கள். எனக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார் ‘ சம்யுக்தா.

-விளம்பரம்-
Advertisement