நேற்று பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சனம் ஷெட்டிக்கு இடையிலான பிரச்சனை தான் தற்போது பிக் பாஸ் ரசிகர்களால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரமாக கொஞ்சம் சலிப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து வருகிறது. அதற்கு காரணமே பிக் பாஸ் கொடுத்து வரும் டாஸ்க் தான். இந்த சீசன் ஆரம்பித்த ஓரிரு தினங்கள் மிகவும் சலிப்பாக சென்றுகொண்டிருந்தது. ஆனால், சுரேஷ் சக்கரவர்த்தி செய்த சில சேட்டைகளால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சூடு பிடித்தது. ஆரம்பத்தில் இவருக்கும் அனிதாவிற்கும் இடையே ஒரு பிரச்சினை வெடித்தது.
அது ஓரிரு நாட்கள் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னர் இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் பிரச்சனை ஏற்பட்டது.அந்த பிரச்சனை நேற்று பூதாகாராமாக வெடித்தது. சமீபத்தில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தார் பிக் பாஸ். இதில் போட்டியாளர்கள் ஒரு குழு அரசர்களாகவும் ஒரு குழுக்களாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன இதில் நேற்றைய நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி அரக்கர் கூட்டத்தை சக்கரவர்த்தி அரசர் கூட்டத்திலும் இருந்தார் இந்த டாக்கில் போது சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருமே ஆரம்பத்தில் வாய்ச் சண்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சுரேஷ் சக்ரவர்த்தி கையில் வைத்திருந்த தன்டாயுதத்தால் நிஷாவை விளையாட்டாக அடிக்க சென்றபோது அது தெரியாமல் சனம் ஷெட்டி மீது பட்டு விட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி வாடா போடா என்று கண்டமேனிக்கு விளாசித் தள்ளினார்.இந்த பிரச்சனை கொஞ்சம் பெரிதாகி விட மற்ற போட்டியாளர்களை அனைவரும் இருவரையும் சமாதானம் செய்தனர். ஆனால், பலரும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு எதிராகத்தான் பேசினார்கள். பின்னர் அர்ச்சனா, சுரேஷ் சக்கரவர்த்தியை அழைத்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வைத்தார். அதன் பின்னர் பிக்பாஸ் இடம் முறையிட்ட சுரேஷ் சக்கரவர்த்தி தன்னை தன் கனபெஷன் ரூமுக்கு அழைக்க கேட்டிருந்தார்.
அங்கே சென்ற அவர் நான் தவறு செய்துவிட்டேன் அதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து என்னை வெளியேற்றி விடுங்கள் என்று கதறி அழுதது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.வயது வித்தியாசம் பார்க்காமல் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு தவறு செய்துவிட்டதால் தன்னை வெளியேற்றுங்கள் என்று சுரேஷ் சக்ரவர்த்தி செய்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதே போல அர்ச்சனா, சுரேஷ் சக்ரவர்த்தியை அழைத்து அனைவரிடமும் அத்தனை முறை மன்னிப்பு கேட்க வைத்தார்
சனம் ஷெட்டியிடம் மட்டுமல்லாமல் ரம்யா, நிஷா என்று அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வைத்தார் அர்ச்சனா, ஆனால், ஒரு பேச்சிக்கு கூட சனம் ஷெட்டியை சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கேட்க சொல்லவில்லை அர்ச்சனா. இப்படி ஒரு நிலையில் இந்த விகாரத்தில் பல்வேறு பிரபலங்களும் சுரேஷுக்கு ஆதரவாக ட்வீட் போட்டு வருகின்றனர். மேலும், சுரேஷ் விஷயத்தில் சனம் ஷெட்டிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக பஞ்சாயத்து செய்த அர்ச்சனாவையும் விமர்சித்து வருகின்றனர்.