பிரபல டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் ஆண்டு தொடரும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக உள்ள டாப் 20 பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் சீரியல்நடிகர்கள் மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியிலில் ஆரியை விட பாலாஜி முருகதாஸ் முன்னைலியில் இருப்பதாய் பார்த்து சனம் ஷெட்டி கடுப்பாகி உள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்த பட்டியலில் முதல் இடத்தை குக்கு வித் கோமாளி அஸ்வின் பெற்றுள்ளார். அதே போல பிக் பாஸில் கலந்துகொண்ட ரியோவும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். சரி இந்த பட்டியலில் முழு விவரத்தை தற்போது காணலாம் : –
- அஸ்வின்
- பாலாஜி முருகதாஸ்
- RJ விஜய்
- சோம் சேகர்
- ஆரி
- நந்தன் லோகநாதன்
- நிதின் ஐயர்
- சிப்பு சூர்யன்
- ரியோ
- விஷ்ணு விஜய்
- கதிரவன்
- அக்ஷய் கமல்
- விராட்
- புவி அரசு
- குமரன்
- ப்ரஜன்
- ரக்ஷன்
- ராகுல் ரவி
- சித்து
- நவீன் குமார்
ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளனர். இதில் கொடுமை என்ன வென்றால் பாலாஜி இரண்டாம் இடத்தை பிடித்ததை விட ஆரியை விட சோம் சேகருக்கு டாப் இடம் கிடைத்து உள்ளது. சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் ஆனதை விட பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிக வாக்குகளை பெற்ற போட்டியாளர் என்ற சாதனையும் செய்து இருந்தார்.
அப்படி இருக்க ஆரிக்கு 5ஆம் இடம் கிடைத்து இருப்பதை பலரும் ஏற்றுக்கொள்ள வில்லை. அந்த வகையில் இதுகுறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ள சனம் ஷெட்டி, சென்னை டைம்ஸ் எதன் அடிப்படையில் இந்த டாப் பட்டியலை வெளியிட்டது என்று தெரியவில்லை. ஆரி பிரதர் நீங்கள்தான் இதில் முதல் இடத்தில் இருந்திருக்க வேண்டும். நீங்கள்தான் மக்களால் விரும்பப்பட்டு பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக வாக்குகளை பெற்றவர். ஆனால், உங்களின் வெற்றியை நாங்கள் கொண்டாடுகிறோம் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.