பிக் பாஸ் மூலம் 63 லட்சம் சம்பாதித்த சனம் கேன்சரால் வாடும் நடிகைக்கு உதவ 1.6 லட்சம் இல்லையா ? உண்மை தெரியாமல் பேசும் சிலர்

0
1168
sanam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் இருந்தனர். அதில் சனம் ஷெட்டியும் ஒருவர். அதே போல மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.

இதையும் பாருங்க : அடியே ரத்தி அக்கினி ஹோத்திரி – மான் கராத்தே பட நடிகையா இது – எஸ் கே சொன்னது போல நல்லா டின் பீர் மாதிரி தான் இருக்காங்க.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சனம் ஷெட்டி பெரிதாக பேட்டிகளில் பங்கேற்கவில்லை. இருப்பினும் சமூக அக்கறையுடன் பல உதவிகளை செய்து வருகிறார் சனம். இப்படி ஒரு நிலையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அங்காடித்தெரு பட நடிகையின் சிகிச்சைக்கு உதவுமாறு ட்வீட் ஒன்றை செய்து இருந்தார் சனம். அதில், புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நடிகை சிந்துவின் சிகிச்சைக்கு 1.6 லட்சம் வேண்டும் என்றும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்றும் கோரிக்கை வைத்து இருந்தார் சனம்.

இதை பார்த்த பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்வதாக கூறி இருந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் 63 லட்சம் சனம் சம்பாதித்துள்ளார் என்றும் அவரிடம் சிந்துவிற்கு உதவ 1.6 லட்சம் இல்லையா என்று சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால், நடிகை சிந்துவிற்கு சனம் ஷெட்டி ஏற்கனவே பண உதவியை செய்து இருக்கிறார் என்பதை நடிகை சிந்துவே பேட்டியில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement