புதிய காதலர விடுங்க, தர்சனுக்கு முன் சனம் ஷெட்டி காதலித்தவர் யார் தெரியுமா ? அவரும் நடிகர் தான்.

0
1232
sanam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர், அதில் சனம் ஷெட்டியும் ஒருவர். நடிகை சனம் ஷெட்டி நடிகை என்பதை விட மக்கள் மனதில் பிரபலமானது தர்ஷனின் காதல் விவகாரத்தில் தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் இருந்தபோது நடிகை சனம் ஷெட்டி தான் தான் தர்ஷன் இன் காதலி என்று அடிக்கடி கூறி வந்தார். அதேபோலத் தர்ஷனுக்கு ஆதரவாக பல்வேறு வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தங்கள் இருவருக்கும் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது என்று சனம் ஷெட்டி ஆதாரங்களை வெளியிட்டார்.

-விளம்பரம்-
Image result for kalai vendhan movie"

ஆனால், தர்ஷனோ சனம் ஷெட்டி தன்னை டார்ச்சர் செய்ததாகவும், அவருக்கு இன்னமும் அவரது பழைய காதலனுடன் தொடர்பு இருக்கிறது என்றும் கூறி இருந்தார். மேலும், சத்யா மற்றும் ரம்யா(பிக் பாஸ் ரம்யா) திருமண நிகழ்ச்சிக்கு அவள் சென்ற போது அங்கே அவளுடைய முன்னாள் காதலன் வந்திருக்கிறான். அவருடன் சேர்ந்து இரவு பார்ட்டியில் ஒன்றாக இருந்திருக்கிறார் என்று கூறி இருந்தார். தர்ஷன் சொன்ன சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் வேறு யாரும் இல்லை அவரும் ஒரு நடிகர் தான்.

- Advertisement -

அவருடைய பெயர் அஜய், இவர் தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘கலைவேந்தன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சனம் ஷெட்டி தான் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பின்னர் தான் சனம் ஷெட்டி தர்ஷனை காதலித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், தர்ஷன் காதல் பிரிந்ததற்கு அஜய் தான் காரணம் என்று தர்ஷன் கூறிய போது பேட்டி ஒன்றில் பேசிய அஜய், எனக்கு சனம் ஷெட்டியை 6 வருசமாக தெரியுமா 3 வருடமாக காதலித்தோம் ஆனால், 2 வருடமாக நாங்கள் பேசிக்கொள்வது இல்லை. நாங்கள் இருவரும் பிரிந்த போது கூட சண்டை கூட போடவில்லை. இருவரும் நன்றாக பேசிவிட்டு முடிவெடுத்த தான் பிரிந்தோம்.நாங்கள் காதலித்தது உண்மை தான் ஆனால், தர்ஷனை காதலித்த பின்னர் நாங்கள் இருவரும் பேசிக்கொள்வதே இல்லை என்று கூறி இருந்தார் அஜய்.

-விளம்பரம்-
Advertisement