கதற கதற கைது செய்யப்பட்ட மீரா மிதுன் – செம சந்தோஷத்தில் சனம் போட்ட பதிவை பாருங்க.

0
3047
sanam
- Advertisement -

சமூக வலைதளத்தில் தொடர்ந்து அவதூறாக பேசி அடாவடி செய்து வந்த மீரா மிதுன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் சமூக வலைதளத்தில் பலரை பற்றி அவதூறாக பேசி நெகட்டிவ் பப்லிசிட்டியை தேடிக்கொண்டார். இவர் மீது ஏற்கனவே பல்வேரு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் Sc சமூகத்தினரை மிகவும் தர குறைவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனால் இவர் மீது, ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்த நிலையில் இன்று இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பலர் நிம்மதியடைந்துள்ள நிலையில் சனம் ஷெட்டி, மீரா மிதுன் கைது செயப்பட்டதற்கு போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க : என் அம்மா மற்றும் அக்காவுடன் – பல ஆண்டு கழித்து சொந்த ஊர் சென்ற சேரன். அழகிய தருணத்தின் புகைப்படம்.

- Advertisement -

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் கிரைம் துறை ஆகிய இரண்டையும் நினைத்து பெருமை அடைகிறேன். இன்று உங்களின் சரியான நடவடிக்கைக்கு நன்றி. கடந்த சில ஆண்டுகளாகவே சகித்துக் கொள்ள முடியாத அவதூறான பேச்சுகளை கேட்டுவந்த எங்களுக்கு தற்போது ஒரு முடிவு கிடைத்துள்ளது என்று பதிவிட்டுள்ளார். மீரா மிதுனுக்கும் சனம் ஷெட்டிக்கும் ஏற்கனவே வாய்க்கா தகராரு இருந்து வந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு மாடல் அழகியான மீரா மிதுன் அழகி பட்டத்தை வைத்து மோசடியில் ஈடுபட்டதாக இவரிடம் இருந்து அழகி பட்டம் பறிக்கப்பட்டது.

அந்த பட்டம் அதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், மீரா மிதுன் அழகிப் போட்டிகளை நடத்துவதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே இவர் சமூகவலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார்.

-விளம்பரம்-
Advertisement