சம்யுக்தாவை விட சனம் குறைச்சலா – கடுப்பான ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த சனம் ஷெட்டி.

0
1471
sanam

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேப்ரில்லா, ரம்யா ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் நேற்று நிஷா, அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், ரேகா ஆகியோர் உள்ளே சென்று இருந்தனர். அதே போல இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் சம்யுக்தா உள்ளே சென்றதை காண்பித்தனர். உள்ளே சென்ற சம்யுக்தா, பாலாஜியை பேபி என்று கொஞ்சி குலாவி ஆறுதல் சொன்னார்.

அதே போல முதல் ப்ரோமோவில், சுச்சித்ரா கூட வந்திருக்கிறார். ஆனால், அவரை ஓரமாக தான் கான்பித்து இருந்தனர். ஆனால், இவர்கள் அனைவரையும் விட சனம் ஷெட்டியின் என்ட்ரிக்கு தான் ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்றார் போல சனம் ஷெட்டி இன்று வந்திருப்பதை இரண்டாம் ப்ரோமோ மூலம் காண முடிந்தது. அவர் மட்டுமல்லாமல் ஆஜீத், வேல் முருகன் ஆகியோரையும் கவனிக்க முடிந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் அர்ச்சனா,நிஷா, ரேகா, ஜித்தன் வரும் போது ஒரு ஸ்பெஷல் ப்ரோமோ மூலம் காண்பித்தனர்.

இதையும் பாருங்க : நான் வராததற்கு விஜய் டிவி காரணம் இல்லை அந்த லேடி தான் காரணம் – சுரேஷ் வேதனை.

- Advertisement -

அதே போல இன்று சம்யுக்தா என்ட்ரியை கூட ‘கண்ணம்மா கண்ணம்மா’ என்று செண்டிமெண்ட் பாடலை போட்டு ஸ்பெஷலாக காண்பித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் சனம் ஷெட்டி என்ட்ரியை மட்டும் ஏன் ப்ரோமோவில் ஸ்பெஷலாக காண்பிக்காமல் ஒரு ஓரமாக காண்பித்துள்ளார்கள் என்று சனம் ஷெட்டி ரசிகர்கள் விஜய் டிவி மீது கொஞ்சம் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும், சம்யுக்தாவை விட சனம் ஷெட்டி எந்த விதத்தில் குறைந்தவர் என்றும் சமூக வளைத்ததில் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் சனம் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததை நினைத்து குஷியில் ஆழ்ந்துள்ள சனம் ஷெட்டி ரசிகர்கள் சனம் ஷெட்டிக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். அதே போல ட்விட்டரில் சனம் ஷெட்டி என்ற ஹேஷ் டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement