20 கிலோ குறைத்தும் உருவத்தை கேலி செய்த ரசிகர்கள் – தரமான பதிலடி கொடுத்த வித்யூலேகா.

0
1482
vidhyu
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் வாரிசுகள் தற்போது நடிகர்களாகவும், நடிகைகளாகவும் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வித்யு லேகாவும் ஒருவர். இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூ லேகா. இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என்று பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-46-1024x711.jpg

இவர் பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை தமிழில் எந்த படத்திலும் காண முடிவதில்லை. இருப்பினும் அம்மணி தெலுங்கு சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மட்டும் தெலுங்கில் 6 படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : அமலா பாலின் கவர்ச்சி புகைப்படத்திற்கு பிரேம்ஜி போட்ட கமன்ட், கழுவி ஊற்றும் ரசிகர்கள் (த்ரிஷாக்கும் இதே பிட்டு தான்)

- Advertisement -

சினிமா உலகில் நுழையும் போது நடிகை வித்யு லேகா பப்ளியாக தான் இருந்தார். பின் தனது உடல் எடையை குறைத்து பிட்டான உடலில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வித்யூ லேகா, 20 கிலோ குறைத்திருக்கிறேன்.

ஆனால் இன்னமும் எனது புகைப்படங்களின் கீழ் எனது உடல் எடையை வைத்து பலரும் உருவ கேலி செய்து வருகின்றனர். என்னை பன்றி என்றும், நான் நடனம் ஆடும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றும் பேசுகின்றனர். சில நாட்கள் நான் அளவுக்கதிகமாகவே எடை இழக்கிறேன். யாரையும் திருப்திபடுத்த முடியாது போல.என்னைக் கிண்டல் செய்பவர்களே, இன்று 200 கலோரிக்களை எரித்திருக்கிறேன். உற்சாகமாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement